பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறக்கட்டளையின்நோக்கமும் செயற்றிட்டங்களும் 1. தமிழில் புகழ்பெற்ற முற்போக்குச் சிறுகதைகள், கட்டுரைகள், திறனாய்வு, சுயசரிதை, புடைநூல் என ஏராளமாக எழுதித் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கடல் கடந்த மேலைநாடுகளிலும் மிகுதியான வாசகர்களைப் பெற்றிருந்த அஞ்சாநெஞ்சன் அமரர் வே.கோவிந்தன் (விந்தன்) அவர்களுடைய படைப்புகளை அறக்கட்டளையின் மூலம் வெளியிடுதல். மேலும் அந்த மாமனிதனின் மறைக்கப்பட்ட திரையுலகச் சேவையை வெளிக் கொணர்தல். 2. இளைய தலைமுறை எழுத்தாளர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கென்று நூலகம், ஆய்வுக்கூடம் போன்றவற்றை அமைத்தல். 3. ஒவ்வோர் ஆண்டும் சிறந்து விளங்கும் எழுத்தாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் போன்றோர்க்கு ஊக்கம் தரும் விதமாக உதவித் தொகை, பரிசுகள் அறக்கட்டளையின் மூலமாக வழங்குதல். 4. ஏழை மாணவர்களின் கல்வி தொடர்பாக அறக்கட்டளையின் மூலம் உதவிகள் செய்தல். கல்வி நிறுவனங்கள் கல்வி தொடர்பான அறக்கட்டளைகளை ஏற்படுத்துதல். அவற்றின் மூலம் அறக்கட்டளையை முன்னேற்ற பாதை நோக்கிப் பயணிக்கச் செய்தல். 5. புதிய வளரும் எழுத்தாளர்களுக்காகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களை அழைத்து, திறந்தவெளிக் கூட்டங்கள் நடத்துவது. அவர்களுக்கு உரிய, சிறந்த பயிற்சி அளிப்பது. 6. அறக்கட்டளையின் வளர்ச்சிக்காகப் மாநில, மைய அரசாங்கம், நகர்ப்புறப் பஞ்சாயத்து, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆகியோரிடமிருந்து உதவி கோரி அறக்கட்டளையை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செலுத்துதல். 7. கடுமையான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படின், உரிய நிவாரண உதவி செய்தல். 8. உயரிய நோக்கங்களுடன் செயற்படுவதும், வளர்ச்சி பெறுவதும், எக்காரணம் கொண்டும் அறக்கட்டளை இலாபநோக்கத்துடன் செயற்படும் நிறுவனம் அன்று, என்ற உறுதிமொழியுடன் செயலாற்றுதல். 9. அறக்கட்டளை எந்தவித எதிர்ப்பலனும் எதிர்பாராமல், சுயமாகவும், தனியாகவும் செயற்படும் ஒரு சேவை மையம் என்ற நோக்கத்தினை உறுதியுடன் பின்பற்றுதல். விந்தன் நினைவு அறக்கட்டளை - நிருவாகக் குழு (பதிவு எண்,756/2003) விந்தன் அறக்கட்டளை தலைமை அலுவலகம் 綫 纖 எண்:17, (ப.எண்:72), அருணாசலம் தெரு, செனாய் நகர், சென்னை-600030. இந்தியா. தொலைபேசி எண்:26680436, செல் 9: 4441452.75 E-Mail : info@windhan.org Website : www.vindhan.org.