பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- |అవీ ఇ9 வாழ் க்கை நெறி; - செல்வம் வெல்லுமோ கூற்றுவனை? நந்தி அடிகள் செல்வன் அவன் - சிறிதும் ஈகை குணமற்றவன். பணம் சேர்ப்பதிலே குறியாக வாழ்பவன். அதில் வெற்றியும் பெற்றவன். சீமான் என்ற பட்டப் பெயரும் உண்டு அவனுக்கு. தனக்கும் சரி, குடும்பத்திற்கும் கூட சுகமான வாழ்வு தர விரும்பாதவன். சுகமாக வாழ்பவர்களைக் கண்டால் கூட பொறாமைப்படுபவன். இப்படி செல்வத்தை வீணாக்குகின்றனரே என பெருமூச்செறிவான். எளியோர், வறியவர்களுக்கு அதுவும் தன் உறவினர்களுக்குக் கூட உதவி செய்யாமல் சதா பணம். பணம் என்று அலைவதும், பணம் சேர்ப்பது ஒன்றே வாழ்வின் கடமை என்றும் நினைப்பவன். அவனிடம் செல்வம் பல வகையிலும் வந்து சேர்ந்த வண்ணமிருந்தது. ஒருநாள் - - அடுத்த கிராமத்துக்கு வட்டிப்பணம் வசூலித்து வரப் புறப்பட்டான் அந்தச் சீமான். ஆற்றைக் கடந்து போக பரிசல் உண்டு. இளங்கன்னியர் நகையொலி செய்வது போல ஆறு இருகரைகள் தொட்டும் ஒடிக் கொண்டிருந்தது. - புது வெள்ளம். அதுதான் நீர் இப்படி இரு கரைகளைத் தொட்டுச் செல்கிறது. பரிசலில்தான் போக வேண்டும் என்று நினைத்தபடியே பரிசலோட்டியை நோக்கி சீமான் நடந்தான். சுவாமி புது வெள்ளம் துடுப்புப் போட முடியாது. ஐயா, அவசர ஜோலிங்கறதாலே சம்மதிக்கிறேன். - இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 13