பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீமான், அவன் கேட்ட தொகையைத் தர முடியாது என்று பேரம் பேசினான். ஊரில் பெரிய தனவான். பொல்லாப்பு ஏன் என்று எண்ணியவனாக பரிசலோட்டி சம்மதித்தான். சீமான் பரிசலில் ஏறுகிறான். உள் மனம் எப்படியோ பயலை ஏமாற்றி விட்டேன். காசு என்ன செடியில் முளைக்கிறதா? - ஏழை பரிசலோட்டி கேட்ட தொகையைத் தர முடியாது என்று பேரம் பேசி, அவனைத் தன்னுடைய விருப்பம் போல் சொன்ன குறைந்த தொகைக்கு பரிசல் விடச் செய்த தனது திறமையைத் தனக்குள்ளாகவேப் பெருமை பேசி பெருமிதத்துடன் பரிசலில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான் சீமான். நீரலைகள் கம்பீரத்துடன் சுழன்றன. புது வெள்ளத்தின் ஆர்ப்பாட்டமும் தொடங்கியது. ஆற்றில் வெள்ள நீரின் அபாயம் அதிகமாயிற்று. பரிசலோட்டிக்கோ பயம் ஒருபுறம் பிறந்தது. பரிசல் தாறுமாறாக ஆடத் தொடங்கியவுடன், "ஐயோ சுவாமி, ஆத்துலே வெள்ளம். பரிசலை எடுக்க முடியாதுன்னு சொன்னேனே கேட்டீங்களா? இப்ப தண்ணி ஏறுதே' என்று இரைந்தான். கரை இன்னும் வரவில்லை. அடுத்த ஊரில் கடன் வாங்கிச் சென்ற அப்பாவுவிடம் எப்படியும் பணத்துடன் நின்று போன வட்டித் தொகையையும் வாங்கி விட வேண் டும் என்ற வெறியுடன் அல்லவா சீமான் புறப்பட்டான்? அப்பாவு வண்டி மாட்டை விற்று வந்து தொகையைப் பறித்து வராவிட்டால் பணம் வந்து சேராது என்ற ஒரு பேராசை சீமான் மனத்தில். பெரிய அலை வந்து பரிசலைக் கவிழ்த்து விட்டது. பரிசலோட்டியும் சீமானும் ஆற்றின் புது வெள்ளத்தில் தவித்தனர். பரிசலோட்டிக்கு நீச்சல் தெரியும். சீமானுக்கோ? கடன், வசூல், வட்டி விவரம், பேய் போன்று பணத்தைக் காப்பது எப்படி என்பது மட்டுமே தெரியும். நீச்சல் தெரியாதே ஆற்றின் புது வெள்ளத்தின் வேகத்தை சமாளிக்க முடியவில்லை. நீர் ஆற்றின் உள்ளே சீமானைக் கொண்டு சென்றது. மீண்டும் ஆற்று வெள்ளத்தின் மேல் தலையை நீட்டி "ஐயோ காப்பாத்துங்களேன்' என அலறினான். பிறகு காணவில்லை. சில நிமிட நேரத்திற்குப் பிறகு நீரில் மேல் வந்தான். மூச்சு திணறியது. சாகப் போகிறோம் என்ற பயமும் வந்தது.