பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையுணர்வும், செல்வத்தை வறியவர்களுக்குக் கொடுத்து மகிழும் தான குணமுமே சிறந்த குணங்களாகும். என் செல்வத்தையும் வறியவர்களுக்கு, ஈசனடியார்களுக்குத் தந்து தெய்வத்தை நோக்கி நடப்பதே என் கடமை. சீமான் பரிசலோட்டியைத் தன் இல்லத்திற்கு வந்து பணம் பெற்றுப் போகுமாறு கூறி விட்டுத் தன் இல்லம் நோக்கி நடந்தான். ஒரு புதிய மனிதன் ஆனது போன்ற உணர்வு நெஞ்சுக்குள் சுழன்றது. சித்தர் பெருமான் திருமூலத்தேவர் பிரான் இக்காட்சியை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறார். 'செல்வர்களே! இறை உணர்வே உண்மையான செல்வம் ஆகும். செல்வத்தை மட்டும் துணையாகக் கொண்டு கூற்று வனான யமனை வெல்லுதல் முடியுமா? முடியாது என்பதனை அறிந்து கொள்ளுங்கள். தெளிந்த நிலை பெறுவீர். கலக்கம் கொள்ளாதீர்கள். உங்களிடத்தில் உள்ள செல்வம் ஆற்று வெள்ளம் எப்படி தன்னுள் அகப்பட்டவரின் உடலையும் உள்ளத்தையும் கலக்கும்; புரட்டி எடுக்குமோ அதைப் போன்றதே என்பதனை உணர்வீர். தெய்வ உணர்வுடன் மக்களிடம் அன்பினைக் காட்டுதலே உண்மையான இன்பம். அதுவே நற்செல்வம் என்று உணருங்கள்" என்று கூறுகிறார் திருமூலப் பெருமான். 'தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன் மின் ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக் கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே." (திருமந்திரம் - 171) வேண்டுதல்வேண்டாமை இலான்அடிசேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. (4) விருப்பு வெறுப்பு இல்லாதவன் வழியில் நடப்பவர்க்கு எப்பொழுதும் e o துன்பமில்லை. ருராம் சிட்ஸ் தமிழ்நாடு (பி) லிமிடெட் 16 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005