பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமரர் திருமதி ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் 2004ஆம் ஆண்டுக்கான பரிசு ரூ.5000 பெற்ற நாவல் காக்கைச் சிறகினிலே. - பா. சத்தியமோகன் அத்தியாயம் 4 ன்று மட்டும் சர்வ நிச்சயம் உள்ளுக்குள்ளே என்ன நினைக் கிறோமோ, நினைத்துக் கொண்டிருக்கிறோமோ... அதைத்தான் உலகில் நிகழ்வதாகவும், நிகழப் போவதாகவும் கருதிக் கொண்டிருக்கிறோம். அதுதான் உலகில் நாம் தடுமாறக் காரணம். அதுவேதான் வாழ்வின் ருசிக்கும் காரணம். அகம் பிரம்மாஸ்மி. தத்துவம் சும்மா இல்லை. சிவானியைப் பார்ப்பதற்கு மேக்ஸ் புரியவில்லை என்ற ஒரு காரணம், திட்டமிடாமல் அல்வாத் துண்டு மாதிரி அமைந்து விட்டதே. - இது எப்படி? மனசில் நினைப்பதே இப்போது வெளியிலும் நிகழ்ந்திருக்கிறது. நிகழ்ந்து கொண்டிருக்கிறது. - இல்லாவிட்டால் அப்பாவே இப்படி சொல்வாரா? 'இராஜகோபால் வீட்டுக்குப் போய் குவார்ட்ரேடிக் ஈக்குவேஷன் கத்துக்கோ என்று. - இதெல்லாம் மனத்தில் ஒடிக் கொண்டேயிருப்பதால் கேசவனின் மனம் காலேஜில் ஒரு நிலையாக இல்லை. - எப்போது பீரியட் முடியும் என்கிற கணிப்பாகவே இருந்தான். பெரும்பாலும் கணக்கு பீரியட் புரிவதேயில்லை. கண்டிப்புக்குப் பெயர் பெற்ற லெக்சரர் டேவிட்தான் வந்திருந்தார். கடுகடு முகமும் பல் கடித்தால் வெளியே தெரியாமல் முறைத்துப் பார்க்கின்ற அகலக் கண்களும் பெரிய பிரச்னை. கவனிக்க முடியாத கணக்கை-தேவையே இல்லாத இந்த கணக்கை - புரிந்து கொண்டது போல் நடிக்க வேண்டியிருக்கிறதே... என்ன செய்வது? - இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 17