பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த வருஷம் முதல் பெஞ்சில் உட்கார்ந்தாயிற்று. இன்னும் ஒரு வருஷத்தில் டிப்ளமோ முடித்து வேலை தேடும் படலம். கவனமாக இருந்தும் ஒரு முறை கண் செருகி இழுத்துக் கொண்டு போய் விட்டது. கேசவன் மாட்டிக் கொண்டான். "ஹேய் பாய்! என்ன பண்றே?’ என்று சாக்பீஸ் துண்டைப் பிய்த்து லொட்டென்று வீச - செம வலி வலித்தது. 'இல்லை சார்... அது வந்து...” 'முதல் டெஸ்கில் உட்கார்ந்துதுங்கறியா? நீயெல்லாம் திட்டமா உருப்பட மாட்டே..." லெக்சரர் டேவிட் சபிக்கும்போது மிக ஞாபகமாக திட்டமாக' என்ற சொல் சேர்ந்து கொள்ளும். - 'திட்டமா இந்த ப்ராப்ளம் செமஸ்டருக்கு வரும்", 'இப்படி போட்டா திட்டமா ஆன்சர் வரவே வராது" என்கிற விதமாய் வித வித அர்த்தம் வருகிற மாதிரி பயன்படுத்துவார். :۰ در ஆனால், என்னவொரு சோகம் - அவர் பயன்படுத்தும் நெகட்டிவ் சாபங்கள் படிக்கிற பையன் ஒவ்வெர்ருவனுக்கும் தவம் செய்யும் முனிவர் ஒருவரிடம், 'நீ மனித உருவம் அற்றுப் போகக் கடவது” என்பது மாதிரி பயம் தருபவை. கேசவிற்கு நல்ல நாளிலேயே பயம். மென்மைவாதி. சாக்பீஸ் விள்ளல் அடி சரியாக கழுத்துச் சதையில்பட்டு ஒர் அம்பு எம்பி இராஜகோபாலின் சட்டைக்குப் பின்புறம் நுழைந்தது. அவன் டெஸ்கில் சாய்மானமாக கவிழ்ந்து எழுதுவதுபோல பாவ்லா புரிந்து கொண்டிருந்தான். அதனால் தப்பினான் போலும். 'இல்ல சார்! இன்னிக்கு...” என்று லெக்சரர் டேவிட்டுக்குப் பதில் சொல்லத் தொடங்கியபோதுதான் அந்த கூச்ச வியாதி வந்து விட்டது. * . 'என்ன மேன்! தலையை லொடுக்குன்னு கவுத்துகிட்டு தரையைப் பார்த்து பதில் சொல்றே?” “அவன் எப்பவுமே அப்படித்தான் சார்:" இராஜகோபால்தலை நிமிர்ந்து கேசவனுக்குப் பதிலாகப் பேச லெக்சரருக்கு இன்னும் கோபம் அதிகமானது. 18 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005