பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எப்படிடா கூலா பேசறே: உன்னை எல்லார் முன்னாடியும் பொட்டைன்னு திட்டிட்ட அவனை சும்மா விட மாட்டேன்டா.” 'இராஜகோபால்! நீ பழசுக்கே போறே... இப்ப உங்க வீடு வந்துருச்சு.' - 'வா! காபி குடிச்சிட்டுப் போகலாம்...” ‘'எதுக்குடா சிரமம்?” 'ஒண்ணும் சிரமம் இல்லை... சங்கோஜப்படாம வா.” 'என்னால வீண் தொந்தரவு.” 'என்ன்டா புதுசா வீட்டுக்கு வர்றவன் மாதிரி...” கேசவனுக்குள் சிவானி தனது கவிதை நோட்டில் எழுதித் தந்த முருகன் பற்றிய வரிகளே மீண்டும் நினைவு வந்தன. அந்த நினைவு தந்த அச்சமே புதிதாக இருந்தது. அவள் மனத்தில் குடி கொண்ட முருகனான தன்னை வரவேற்க எந்த உடையில் வருவாள்? என்ன கலர்புடைவையோ? கண்கள் எப்படி இன்று விரியுமோ? ஏக்கங்கள் வளர்த்த முள்காடு அது. - எப்படியும் இந்த வாரம் சிவானியைச் சந்திக்கும் வாய்ப்பை நிச்சயமாக எதிர்பார்த்திருந்தான். அதனால் கேசவ் தனது கவிதை நோட்டைத் தரத் தயாராக வைத்திருந்தான். 'முருகா!' என்று முதல் முறை எழுதித் தந்தது போல வேறு ஏதாவது எழுதித் தருவாளா என்கிற ரகசிய எதிர்பார்ப்பு அது. - ஏதேதோ எண்ணம் விளைந்தபடி இருக்க சிவானியின் கலை உணர்வைக் காட்டும் கிருஷ்ணர் பொம்மை நீல நிற வண்ணத்தில் சிவப்பு அதரத்துடன் நின்றதையே ரசித்தான். சட்டென்று நினைவு வந்தவனாக, 'டேய்! ஒரு விஷயம் கேட்கணும்டா இராஜ கோபால்!” என்றதும் - 'சொல்லு நான் கூட ஒண்ணு கேட்கணும் உன்னிடம்” என்றான் இராஜகோபால். 'முதல்ல நீ கேளு இராஜகோபால்!” 'நீ கேளு...” 'இல்லை நீயே கேளு...” என்றான் கேசவன். இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 21