பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘'நீ இங்கே எங்க வீட்டுக்கு வர்றதுக்கு, கணக்கு கத்துக்க றேன்னு உங்கப்பாகிட்ட பொய் சொன்னியாமே என்றதும் - 'அதெல்லாம் கட்டுக்கதை. யாரோ தவறாச் சொன்னதைக் கேட்டுக்காதே’ என்றான் கேசவன் - மனத்தின் திட்டத்தை அப்பட்டமாக மூடிக் கொண்டு. பல சமயங்களில் அப்பட்டமாக பொய்தான் பேசுகிறது வாய். உள்ளேயிருந்து காபி மணத்திற்கான காற்று புதுவிதமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. காபியைக் கண்ணால் காண்பது இரண்டாம் சுகம் எனில், முதல் ரேங்க் வாங்கும் சுகம்... அதன் பில்டர் கொதி மணம். 'கேசவன்! நீ ஏதோ கேட்கணும்னியே... கேட்டுடு... எங்க அக்கா முன்னாடி எதுவும் வேண்டாம்.” 'உன்னை பிரெளசிங் சென்டர்ல நட்ராஜ் பார்த்தேன்னு சொன்னான்...' து"எவன் நட்ராஜ்?’’ 'தெற்குத் தெரு முதலியார் பையன்.” 'அந்தத் திக்குவாய்க்காரனா?” 'மட்டமா பேசாதே! நேத்து காலை 11.45 இருக்கும். வேலை இருக்குன்னு சொல்லி மூணாவது பிரியட்லயே கிளம்பினியே... அப்பதான் நட்ராஜ் சொன்னான்.” "என்னை மாதிரியே எவனையாவது பார்த்திருப்பான்.” 'இல்லடா, அது நீதான்! ஏன்னா, நானும் அன்னிக்குப் பார்த்தேன்' என்றதும் சட்டை அவிழ்த்து ஆணியில் மாட்டப் போன இராஜகோபால் அப்படியே ஓடி வந்து கேசவனின் வாயைப் பொத்தினான். 'அப்புறம் பேசிக்கலாம் தனியா’’ என்றபோது சிவானி வெளிப்பட்டு, 'ஏன் அவன் வாயைப் பொத்தினே?’ என்றாள் ஸ்டுலில் காபிடம்ளர்களை வைத்தபடி. சமையலறையில் மிக அவசரமான வேலை பாக்கி இருப்பது போல கேள்வி கேட்டுவிட்டு, சிவானி உள்ளே நிலைப்படி ஒரம் சென்றவுடன் சட்ட்ெனகேசவனை நோக்கித் திரும்பி ஒரப் பார்வை செலவு செய்துவிட்டு மறைந்து போனாள். 22 е இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005