பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த அறையின் சிறிய இடத்தில் ஜன்னலோரம் கேசவன் உட்கார்ந்திருந்தான். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவன் தலை மட்டும் தெரியும். வலக் கைப் புறமாக இராஜகோபாலும், நின்று சிரிக்கும் மூன்றடி உயர கிருஷ்ணர் பொம்மைக்கு அருகில் சிவ்ானியும் அவளை ஒட்டி மெலிந்த அவள் தாயும் நிற்க... 'ரிட்டயர்டாகி ஐந்து வருஷங்கள் முடியப் போவுது. இப்போ கூட காலைல எழுந்து சைக்கிள்ல ஆபீஸுக்குக் கிளம்பி தபால் பார்க்கிற மாதிரியே இருக்கு என்று தொடங்கினார் இராஜகோபாலனின் அப்பா. - . மக்களில் மிகப் பலருக்கு நல்ல செய்தி தபால். அதைத் தரும் போது மகிழ்ச்சியோ, துன்பமோஅடையாமல் இயங்குகின்றதபால் துறைப் பணியில் செயல்பட்டது மாதிரியே ரிடையர்டான பிறகு அவரால் நடந்து கொள்ள முடியவில்லை. வீட்டில் பணக்கஷ்டம் வந்தால் துடித்துப் போகிறார். சிட் பண்டில் பணம் ஏமாந்த பிறகு அதிகம் சிரிப்பு காட்டாத முகமாக இராஜகோபாலின் அப்பா முகம் ஆகி விட்டது. "அப்புறம் தம்பி எப்படி இருக்கிங்க தம்பி?” என்று ஹியரிங் எய்டைச் சரி செய்தபடியே கேசவன் முகத்தைப் பார்த்தார். “நல்லாப் படிக்கறீங்களா?” 'நல்லா என்பதில் அழுத்தமாகக் கேட்டார். * ‘எப்படியோபடிச்சு நல்ல வேலைக்குப்போவிடனும் தம்பி...” - தம்பி, தம்பி என்று சேர்த்துக் கொள்ளும்போது அவர் இராஜகோபாலைச் சொல்கிறது போல் இருந்தது. - 'நல்லபடியா சிவானியோட அக்காவை கரையேத்திட்டோம். அதே மாதிரி இவளையும் கட்டிக் கொடுத்தா முடிஞ்சுது கதை' என்றாள்.அந்த மெலிந்த தாய். - 'அப்படில்லாம் பண்ணிடாதே.அம்மா! அப்புறம் கிருத்திகாவை நம்ம வீட்லேயே அக்கா விட்டுட்ட மாதிரி, நாளைக்கு என் குழந்தையும் இங்கேய்ே திரியும். பரவாயில்லையா?!” யானையின் சதையில் நறுக்கென்று அங்குசம் பாய்ந்தது போல தைத்தது அந்த வார்த்தை. சரியாக வாழாத அக்காவின் குழந்தை இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 25