பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருத்திகா அந்த வீட்டில் ஒரு பாரம்தான். அதையும் சுட்டிக் காட்டி விட்டாள். சிரிப்பும் சிரிக்கிறாள் சிவானி. கேசவன் பிரமித்துப் போனான். இத்தனை அழகுடன் இருக்கும் ஒருத்தியைச் சுற்றிலும் இவ்வளவு முடிச்சுகளா என்று ஒருகணம் கேசவன் சிந்தித்தான். தலை நிமிர முற்பட்டது. லொடுக்கென பிறகு தாழ்ந்து கொண்டு விட்டது. பல்லிடுக்கு நடுவே சிக்கிய மாம்பழ நார் போல அவளது அழகு கேசவன் நெஞ்சில் இடையூறாக இருக்கிறது. தலை தாழ்த்திப் பேசும் பழக்கத்தை அது வளர்த்துதான் விட்டிருக்கிறது. எதை அழகு என்று உள்மனம் பார்க்காதபோது பார்த்து' முடிவெடுக்கிறதோ -அந்த முகத்தை - நேருக்கு நேர் பார்த்தாலோ முற்றின நெற்கதிர் போல ஒடிந்து சாய்கிறதே... என்ன பண்ணித் தொலைக்க? - காது கேளாத அப்பாவுக்குத் தெரியாமல் எழுபத்தைந்தாயிரம் பணத்தை இராஜகோபாலும் அவன் அம்மாவும் செட்டியாரிடம் கொடுத்துவிட்டு, வட்டிக் காசும் சரிவரப் பெற முடியாமல் தவிக்கிறார்கள். அவர்கள் நிலைக்குத் தன்னால் ஏதேனும் செய்ய முடியுமா? எனத் தவித்தது கேசவன் உள்ளம். 'எம் பையன் வாராவாரம் போய் செட்டியாரை அரிச்செடுத்து பணத்தை மீட்டுடுவான்” - அந்தத் தாய் சொல்லிக் கொண்டிருந்த போது கேசவன் பார்வை இராஜகோபால் மீது சென்றது. "ஆமாம்மா... வாரா வாரம் போய் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் கடையிலேயே உட்கார்ந்து பணத்தை எடுறான்னு கழுத்துல துண்டு போடாத குறையா கேட்டுட்டுத்தாம்மா இருக்கேன்' என்றான் இராஜகோபால் பச்சையாக. அவ்வப்போது கேசவன் முகத்தைப் பார்த்து அமர்த்தினான். பொய்யால் நெய்த வார்த்தைப் போர்வை பல சமயங்களில் நம்புவதற்கு இடமாகிறது. - 'இவன் இருக்கும்போது எனக்கென்னப்பா கவலை?” என்றாள் இராஜகோபால் அம்மா. - 'நீங்கள்லாம் எதைப் பத்திப் பேசிக்கறேள்?’ என்றார் காது மெஷின் சரிவர வேலை செய்யாத இராஜகோபாலின் தந்தை. 26 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005