பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/~ @ 輸 聽 N மலர்ந்த சிந்தனை கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது அவர் இருப் பதை உணர முடியவில்லை என்று சிலர் குற்றம் சாட்டு கிறார்கள். இது நம் இயலாமையினாலேயே தவிர, கடவுளின் குற்றமன்று. உணர்தல் இருவகைப்படும். நேரிடை யாகப் பார்த்து உணர்வது; மனத்தால் உணர்வது. மனத்தால் உணர்வதே நிரந்தரமானதாகும். இப்பெளதீக உலகம் துன்பங்கள் நிறைந்தது. நாம் அனைவருமே இத்துன்பங்களி லிருந்து விடுதலை பெற்று அமைதி காண விரும்புகிறோம். புத்திக் கூர்மையுள்ளவர்கள் சாமர்த்தியமான திட்டங்களா லும், எண்ணங்களாலும் இத்துன்பங்களிலிருந்து விடுபட முயல்கிறார்கள். ஆனால், மாயாதேவியின் சக்தியோ, புத்திக் கூர்மையுள்ளவர்களையும் மனம் கலங்க வைக்கிறது. மனித சமுதாயம் துன்பங்களிலிருந்து விடுபடுவதென்பது கடுமை யானதே. கோயிலுக்குப் போய் கஷ்டத்தைப் போக்க பிரார்த் தனை செய்வது தவறன்று. ஒருவேளை கடவுள் நமக்கு வேண் டியதைக் கொடுத்தாலும்கூட அதனால் திருப்தி ஏற்படாது. மண் தரையுள்ள வீடு உள்ளவன் அதனால் திருப்தி அடைவ தில்லை. சிமெண்ட் போடுகிறான். சிமெண்ட் தரையுள்ளவன் மொசைக் தளமிடுகிறான். மொசைக் தரைக்கு மேலாக வசதி யுள்ளவன் உயர்ரக கற்களைப் பதித்து பளபளப்பாக்க விரும்பு கிறான். எனவே கிருஷ்ண பரமாத்மாவிடம், 'நான் உன் நித்திய ஊழியன். ஏதோ ஒரு வழியில் பிறப்பு, இறப்பு என்னும் கடலில் வீழ்ந்து விட்டேன். எனவே, தயைகூர்ந்து பிறப்பு, இறப்பு என்னும் கடலிலிருந்து என்னை மீட்டு, உன் கமலப்பாதங்களில் ஒரு தூசியாக என்னை நிலைநிறுத்திக் கொள்வாயாக. நான் உனக்குச் சேவை செய்ய விரும்பு கிறேன். நான் உன்னை நாடியே வந்துள்ளேன். தயவுசெய்து என்னை உன் சேவையில் ஈடுபடுத்து’ எனப் பிரார்த்திக்க வேண்டும். மேலும் பகவானின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்தையும் உபயோகிக்க வேண்டும். இது மட்டுமே நாம் பெருமளவில் விரும்பும் அமைதியைத் தரக்கூடியதாகும். நாம் அனைவரும் பரம புருஷரான பகவானின் படைப்புகளே! ། - சுவாமி பிரபுபாதா ン