பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உங்க சம்சாரம் குழந்தைகள் உங்க பேரிலே கோபமா இருந்தா, உங்க பேரிலே ஏதோ தவறு இருக்குன்னு அர்த்தம். மத்யபானம், பரஸ்திரீ, சூதாட்டம், குதிரை... இப்படி. அந்தத் தவறுகள் செய்யாமலிருக்க முயற்சி பண்ணுங்கோ. 'நீங்க ஆத்மஹத்தி பண்ணிண்டா பிரச்னை தீர்ந்து டுமா? போலீஸ்காரா வ்ந்து ஆயிரம் கேள்வி கேட்பா. சடலத்தை ஆஸ்பத்திரிக்கு எடுத்துண்டு போய் கண்ட துண்டம் பண்ணுவா உங்க வீட்டுக்கு யாரும் வர மாட்டா. தூக்கு போட்டுண்ட வீடுன்னு... 'சம்சாரம், குழந்தைகளையெல்லாம் ஊர் ஜனங்க வாய்க்கு வந்தபடி திட்டுவா. 'நீங்களும் தூக்குப் போட்டுண்டு சந்தோஷமா இருக்க முடியாது. ஆவியா அலையனும்..." - 'வாழ்க்கையிலே கஷ்டங்கள் வரத்தான் செய்யும். அப்போதான் தைரியமா இருக்கணும். தூக்குப் போட்டுக்கிறவன், கோழை; முட்டாள்; அசிங்கம்... - - "ஸ்வாமியைப் பிரார்த்திச்சிண்டு தைரியமா இருங்கோ. நல்ல காலம் வராமல் போயிடாது...' முதலியாருக்கு மனத் தெளிவு உண்டாயிற்று. அறிவுரையைக் கேட்டுத் திருப்தி அடைந்தவராகக் காணப்பட்டார். 'புத்திவந்தது; தப்பு செய்ய மாட்டேன்' என்று கூறி கன்னத்தில் போட்டுக் கொண்டு வந்தனம் செய்தார். அமெரிக்கா போகணுமா? தோற்றத்திலிருந்தே இவர் அமெரிக்காவிலிருந்து வந்தவர் என்று புரிந்து கொள்ள முடிந்தது. நமஸ்காரம் செய்தார். “யாரு? சப்தரிஷியா?" "ஆமாம்...' “லால்குடியா?” இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 31