பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆமாம்...' 'அத்தை பெயர் பூரீமதியா? அவள் செளக்கியமா இருக்காளா?” 'இருக்கா...' "மாந்துரையானை தரிசனம் பண்ணிட்டுத்தான் வந்திருக் இயோ 'ஆமாம்...' "ஊர்ல. உங்க க்ருஹம் இருக்கா?” 'இருக்கு...' 'நீ அமெரிக்கா போய் அஞ்சு வருஷமாச்சா?” 'ஆமாம்...' சற்று மெளன இடைவெளி. 'உங்க ஊரிலே ஸப்தரிஷிகள் பூஜை பண்ணின ஸ்வாமி இருக்கார். காவேரி தீரம். நல்ல முரட்டு மழநாட்டுப் பிருஹசரணப் பிராமணர்கள், நீங்க... ?" 'பிரஹசரணம்னா... நல்ல ஆசாரம் உள்ளவர்கள்னு அபிப்ராயம். ' - 'ஊரை விட்டுட்டு எங்கோ... அமெரிக்கா போய் சம்பாதிக்கணுமா? உன் தாத்தா, கொள்ளுத் தாத்தாவெல்லாம் நல்ல வைதிக சிரத்தை உள்ளவா... அமெரிக்கா போய் சம்பாதிக்க வேண்டுமா?" 'இருக்கும் சொத்து சுகங்களை வைத்துக் கெண்டு உன் கிராமத்திலேயே இருக்கலாம்; திருச்சியிலே ஸ்வாமி தரிசனம் பண்ணிண்டு இருக்கலாம்..." . லால்குடி (அமெரிக்க)க்காரருக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எந்த விஷயத்தைப் பற்றிப் பெரியவாளிடம் பேசி உத்தரவு பெறலாம் என்று எண்ணிக் கொண்டு வந்தாரோ, அதே விஷயத்தை பெரியவாளே விஸ்தாரமாகப் பேசி ஆக்ஞையிட்டு விட்டார். - - 'பெரியவா உத்தரவுப்ப்டியே செய்யறேன்..." 32 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005