பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவா திருவடிகளில் விழுந்து எழுந்தார்கள். 'ஜட்ஜ்மெண்ட் வந்துடுத்து போலிருக்கே?' எவ்வளவு புஷ்டியான சொற்கள் 'எழுதினது, பெரியவா தானே' என்று அந்த இளம் தம்பதி நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா? நிறுத்தக்கூடாது! 6 'ரொம்ப ஏழை. பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணனும்... பெரியவா, திருமாங்கல்யம் அனுக்ரஹம் பண்ணணும்...' அரை மணி கழித்து இன்னொருவர் வந்தார், ஒரு கல்யாணப் பத்திரிகையுடன். 'மாமா பெண்ணுக்குக் கல்யாணம். ரொம்ப ஏழை...' அவருக்கும் ஒரு திருமாங்கல்யம். அடுத்ததாக, இன்னொருவர், 'தம்பி பெண்ணுக்குக் கல்யாணம்...' - கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யருக்கு எரிச்சலாக வந்தது. எல்லாரிடமும் ஒரே பத்திரிகை. ஏன், இந்தத் தில்லுமுல்லு? 'திருமாங்கல்யம் வேணும். ரொம்ப ஏழை. அவ்வளவு தானே? என்றார், பட்டென்று. வந்தவர் குழைந்தார். பெரியவா, மானேஜரிடம் சொல்லி அவருக்கும் ஒரு திருமாங்கல்யம் வாங்கிக் கொடுக்கச் சொன்னார்கள். சிஷ்யரின் ஆத்திரம் அடங்கவில்லை. “பெரியவாளின் தாராளமான, கருணை உள்ளத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களே, சில பேர் என்று ஆத்திரம். 'கல்யாணத்துக்கு யாசகம் கேட்டுப் பல பேர் வருகிறார்கள். தீர விசாரித்து விட்டுத்தான் உபகாரம் செய்யணும். இல்லேன்னா, ஒருத்தரே இரண்டு, மூணு திருமாங்கல்யமோ, வேஷ்டி, புடைவையோ, பணமோ வாங்கிண்டு போயிடறா. யார் 34 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005