பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்டாலும் திருமாங்கல்யம் கொடுப்பதை நிறுத்தி விட்டால் கூடத் தேவலை...' என்று முணுமுணுத்தார். பெரியவா, கொஞ்ச நேரம் கழித்து அழுத்தமாகச் சொன் னார்கள், "எந்தக் காரணத்தைக் கொண்டும், கல்யாணங்களுக்குத் திருமாங்கல்யமோ, பணமோ கொடுப்பதை நிறுத்தவே கூடாது. யாரோ, இரண்டு பேர் ஏமாற்றலாம். பாதகமில்லை. பரம ஏழையாக, டிசர்விங்காக உள்ளவாளுக்குக் கிடைக்காமல் போயிடக் கூடாது. ஒருவர் செய்யும் தப்புக்காக, நடந்து கொண்டிருக்கும் தர்மங்களை நிறுத்தி விடக் கூடாது.” பெரியவா சொன்ன தர்மம் இன்றும் நடைபெறுகிறது. தயிர்க்காரியின் புண்ணியம் சிவாஸ்தானத்தில் ஒரு தயிர்க்காரி இருந்தாள். பூரீ மடத்தைத் தாண்டிப் போகும் போதெல்லாம் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டுப் போவாள். கூட்டமாக இருந்தால், யார் மேலும் பட்டுவிடாமல், தொலைவிலிருந்தபடியே விழுந்து கும்பிடு வாள். காலையில் நீராடுகிற வழக்கமில்லை. அநேகமாக, பிற்பகலில்தான் நீராடுவாள். அதனால், மற்றவர்களுக்குத் தீட்டுப் பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பாள். ஒருநாள் கூட்டமில்லாத சமயத்தில் பெரியவா எதிரில் வந்து தயிர்க்கூடையை வைத்தாள். சிறு சிறு சட்டிகளாக நாலைந்து சட்டித் தயிரை வெளியே வரிசையாக வைத்தாள். 'எசமானே! பசும்பால் காய்ச்சி, உறை குத்தி கொண்டு வந்திருக்கேன். சுத்தமா செய்திருக்கேன். சாமி எல்லாத்தையும். சாப்பிடணும்' என்று உரக்கச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள். பிற்பாடு சிஷ்யரைக் கூப்பிட்டு, 'அந்த சட்டித் தயிர் கொண்டு வா' என்றார்கள் பெரியவர். ஒரு சட்டியிலிருந்து தன் கையாலேயே சிறிதளவு எடுத்துச் சாப்பிட்டார்கள். மீதி சட்டிகளிலிருந்த தயிரை, தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு, மோர்க்கூட்டு, அவியல் செய்யச் சொல்லி, அன்று பிrை செய்தார்கள். இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 35