பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தயிர்க்காரியின் பக்திக்குக் கட்டுப்பட்டு, பெரியவா இப்படியெல்லாம் செய்தார்கள். பெரிய பெரிய தனவந்தர் களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் இது. தயிர் என்றால், பெரியவா கண்ணனாகவே மாறிவிடுவார்கள். ‘சாமி எல்லாத்தையும் சாப்பிடணும் என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போனாளே தயிர்க்காரி, அவள் வார்த்தைகள் சத்தியமாகி விட்டன என்பது வேண்டுமானால், ஒருக்கால் அவளுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால், சாமி சத்தியமானவராயிற்றே! சென்னாரெட்டியிடம் சொல் ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று ஒரு பெரும் போராட்டம் நிகழ்ந்தது. தெலுங்கானா பிரதேசம் தனியாக அமைக்கப்பட வேண்டும் என்பதில் பலர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். அதனால் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பு, ரயில், பஸ் ஓடவில்லை; கடையடைப்பு இத்தியாதி. சென்னாரெட்டிதான் இந்தக் கூட்டத்தின் முக்கியஸ்தர். செய்தித்தாளிலிருந்து இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டு, பெரியவாளிடம் சொன்னார்கள், சிஷயர்கள். பெரியவா, சென்னா ரெட்டியிடம் ஒரு சிஷ்யரை அனுப்பி னார்கள். தற்சமயம் சண்டை வேண்டாம், பிரிவினைப் போராட் டம் இப்போது வேண்டாம் என்று சொல்லச் சொன்னார்கள். சிஷ்யர் கூறியதை, சென்னாரெட்டி பொறுமையாகக் கேட்டார். 'பெரியவா பகவான் ஆயிற்றே? ரீ கிருஷ்ணன், அர்ஜுனனைப் பார்த்து அண்ணனாவது, தம்பியாவது ஆசார்ய னென்ன? பாட்டன் என்ன? போடு, சண்டை என்றுதான் சொன்னார். இப்போது பெரியவா ஏன் மாற்றிச் சொல்கிறார்கள்? சரி, பெரியவா சொன்னா, அது சரியாகத்தான் இருக்கும். தர்மமாகத்தான் இருக்கும்... தாமதமாகத்தான் புரியும்.' X பின்னர், போராட்டத்தை சாதுர்யமாக விலக்கிக் கொண்டார். ○ 36 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005