பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழை வெறும் வீட்டு மொழியாக வைத்திருக்காமல், இலக்கிய மொழியாக மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், புத்தம் புதியன பற்றியெல்லாம் சொல்லும் ஆற்றலுடைய மொழியாக, அறிவியல் மொழியாக ஆக்க வேண்டும் என்ற தணியாத வேட்கையைப் புலப்படுத்த பாரதி இப்படி ஓர் உத்தியைக் கையாண்டான். உலகின் எட்டுத் திசையும் சென்று கற்று கலைச் செல்வங்கள், அறிவியல் நுட்பங்கள் அனைத்தையும் தமிழ்மொழியில் எழுதிச் சேர்த்திட வேண்டும் என்றான் பாரதி. - ஒரு பேதையின் கூற்றாகச் சொன்னாலும் அவன் கூற்றுக்குக் காரணமான குறைகளைக் களைய வேண்டும் என்ற நோக்கு பாரதிக்கு இருந்தது. இந்தக் குறைகள் இன்றைக்கும் இருப்பனதாம். அவற்றைப் போக்க நம் தமிழறிஞர்கள் - பிற மொழிகள் கற்ற தமிழர்கள் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பாரதிக்குத் தமிழ் அழியாத மொழி - அமர மொழி என்ற நம்பிக்கை மிக்கிருந் தது. தமிழ் தெய்வ மொழி, இயற்கை மொழி, அழிக்க முடியாத மொழி என்ற உறுதி தமிழர்க்கு வேண்டும். "தந்தை அருள்வலி யாலும் இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும் இந்தப் பெரும்பழி திரும்டபுகழ் - (தந்தைஏறிப்புவிமிசை என்றும் இருப்பேன்.' இறைவன்) என்று தமிழ்த்தாயே இறுதியில் நம்பிக்கையுரை நல்கியிருப்பதை பாரதியின் பாடலில் நாம் காண வேண்டும். பேதை உரைத்த மொழியாம் பழி-பெரும்பழி தீரும் என்றும் அதை தீர்ப்பதற்குத் தெய்வ அருளுடன் புலவோர் தவ வலிமையும் துணையாகும் என்ற கருத்தையும் சிந்திக்க வேண்டும். அதனாற்றான் புலவர்களை நோக்கிச் சென்றிடு வீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந் திங்குச் சேர்ப்பீர்' என்று வேண்டுகோள் வைத்தான். ஆதலின் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதை விட்டு விட்டு, திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்யும் வகையில் திறம் படைத்தவர்களாய்த் தமிழ் வளர்ப்போமாக. D இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 43