பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 “நானொரு கம்யூனிஸ்ட்” கவிஞர் நா. காமராசன் 'கறுப்பு மலர்களில் இவர் ஏற்படுத்திய அதிர்வுகள் புதுக் கவிதை இருக்கும் மட்டும் இருக்கும். இவரது கவிதை நடை யதார்த்த மானது. ஆனால், பாடு பொருள் களோ அசாத்தியமானவை. அடுத்த இருபத்து தான்கு மணி நேரத்தில் வித்தியாசத்துடன் கூடிய கவிதை கன மழை பெய்யக் கூடு மென எப்போதும் பேனாவுடன் இயங்கி வருகிறவர். கவியரசர் நா. காமராசன் பேனாவைக் கூட திமிர்த்தி வைத்துக் கொண்டுதான் எழுது கிறாரென நினைக்குமளவு எப்போதும் அதிகபட்ச கவிதா கம்பீரத்தோடு காணப்படுகிறவர். - சந்திப்பு: கவிஞர் ஜானகிராமன் எதை வைத்து உங்களை ஒரு கவிஞரென நீங்களே நிர்மானித்துக் கொண்டிர்கள்? நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போது ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. கலைஞரின் கவிதை நடைச் சொல்லோவியங் களும், உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதைகளும் வானொலியில் தொடர்ந்து வெளிவந்தன. கலைஞரின் சொல்லோவியத்தின் உணர்ச்சி யும், சுரதாவின் சிந்தனையும் என்னை மிகவும் கவர்ந்தன. அவற்றை யெல்லாம் மனப்பாடமே செய்யத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்குள் ஆழமான கவிதா அனுபவங்கள் ஏற்பட்டன. - - ஆரம்ப காலக்கட்டங்களில் தேவையான பரபரப்பை வெகு விரைவாக அடைந்து விட உங்களால் எப்படி முடிந்தது? - இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 • 45