பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் கருப் பொருளை மற்ற எல்லாக் கவிஞர்களை விடவும் நான் வித்தியாசமாகச் சிந்தித்தேன். நடைபாதைகளுக்கு என் 'கறுப்பு மலர்கள் தொகுப்பைக் காணிக்கையாக்கினேன். எல்லாராலும் புறக்கணிக்கப்படும் எல்லாரையும் பாடுவதென எனக்கு நானே விதித்துக் கொண்டேன். 'அவர்கள் நீதி மன்றத்தை விசாரணை செய்கிறார்கள்' என்ற என் கவிதை உலகத்திலே எந்தக் கவிஞனும் பாடாத கருப் பொருள் கொண்டது. அதைப்போல் விலை மகளிர் என்ற கவிதையையும். குறிப்பிட வேண்டும். பணம், பதவி என்ற எதற்காகவும் நான் இலக்கியம் வளர்க்கவில்லை. அதனால் பெரிய வரவேற்பைப் பெற்றேன். - - படைப்பிலக்கியம் நினைக்காதது மாதிரி வந்தீர்கள். ஆனால் நினைத்தது போல் தொடர முடியவில்லையே ஏன்? - - புதுக்கவிதைக்கு ஒரே ஒரு சாட்சியம் என் கறுப்பு மலர்கள்தான் என்று செக்கோஸ்லோவியா நாட்டுத் தமிழர் இஸ்சபபில்' அறிவித்திருக்கிறார். அது மட்டுமன்று தமிழகச் சட்டப் பேரவையிலே என் கவிதைகளைப் பற்றிய விவாதங்கள் நடந்துள்ளன. இலக்கியத்தை உடைத்து மக்களிடம் ஜனரஞ்சகத்தைப் பரப்பியது என் கவிதைகள் தாம். முதலில் கருப்பொருளை வைத்துக் கொண்டு, அதற்கு வரிகளைச் செதுக்குவேன். அதன் வலி எனக்குத்தான் தெரியும். விமர்சனம் பல வகைப்பட்டது. இது உங்களுடையது. "விசாரணையே குற்றவாளிக் கூண்டில்தான் ஆரம்பிக்கிறது’ என்று அறிவித்தீர்கள் - அது பிரகடனமா? அல்லது பின் குறிப்பா? பிரகடனம்தான். இங்கே ஒன்றை நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த உலகத்தின் போக்கையே சுத்தமாக மாற்ற வேண்டும். தெளிவாகச் சொன்னால் நானொரு கம்யூனிஸ்ட் என்று சொல்லலாம். உங்கள் இலக்கிய வாழ்க்கையில் சில காலம் அளவிட முடியாத கர்வத்தோடு காணப்பட்டது எதற்காக? ஒவ்வொரு மகாகவிஞனின் இயல்பு அது. கர்வம்தான் கலைஞனை கெளரவப்படுத்துகிறது. சில காலம் என்று கால அளவைக் கணக்கிடா தீர்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். எப்போதும் அப்படியேதான் இருப்பேன். 46 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005