பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடி 56 56ஆவது சுவடி - உங்கள் திருக்கரங்களில் திகழ்கிறது. மக்கள் எழுத்தாளர் விந்தன் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் 1.09.05. அந்தநாளை எப்படிக் கொண்டாடுவது என்று எண்ணினேன். விந்தன் அவர்களின் திருக்குமாரர்கள் வரதராசனும், ஜனார்த்தனனும் சில ஆண்டுகளாக தந்தை யின் புகழ் பரப்ப பலவகையில் முனைந்து வருகிறார்கள். விந்தனுடன் பழகிய என்னைச் சந்தித்துத் திட்டமிடுவார்கள். தந்தையை மறவாத தனயன்கள். அமரர் விந்தனுடன் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகியவன் நான். 'கல்கி வார இதழில் என் சிறுகதைகள் பலவற்றை வெளியிட்டு ஊக்கமளித்தார்கள். இன்று ஞானபீடம் விருது பெற்ற ஜெயகாந்தன் உயர்வுக்கு மக்கள் எழுத்தாளர் விந்தனின் பங்கு மகத்தானது. எனக்கு அவரை அறிமுகப்படுத்தி 'அமுதசுரபி'யில் கதையை வெளியிடப் பரிந்துரை செய்ததை மறக்க முடியாது. . பல சம்பவங்கள் நேற்று நடந்தவை போல் என் மனக்கண்ணில் தோன்றுகின்றன. நேரம் போவது தெரியாமல் என்னுடன் அவர் பேசிக் கொண்டிருப்பார். 'அமுதசுரபி' விற்பனை உயர்வுக்கு அவர் தெரிவித்த உத்திகள் பல. அவர் 'பொன்னி'யில் ஒரு தொடரும், 'கல்கி'யில் ஒரு தொடரும் (பாலும் பாவையும்) எழுதினார். ஆனால், 'அமுதசுரபி'யில் அவர் எழுதிய இரு தொடர்கதைகளும் பரபரப்பாகப் பேசப்பட்டன. ஆனால், இன்று அவர் புகழ்பாடி, அவர் எழுத்தைப் புகழ்பவர்கள் 'அன்பு அலறுகிறது', 'மனிதன் மாறவில்லை. இரு தொடர்கதைளைப் பற்றிப் பேசுவதில்லை. அதனால் எழுந்த இலக்கியச் சர்ச்சைகள் இலக்கிய வரலாற்று ஏட்டில் மறக்க முடியாதவை. அவரைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். நினைத்துப் பார்க்கிறேன் பகுதியில் அவரைப் பற்றி விரிவாக எழுதுவேன். இந்தச்சுவடியில் அவர் புதல்வர்களை எழுத்தாளர் சுப்ர. பாலன் சந்தித்து, தங்கள் தந்தையைப் பற்றி அவர்களிருவரும் கூறியவற்றைத் தொகுத்து எழுதியுள்ளார். பல செய்திகள் அதில் நமக்குத் தெரிய வருகின்றன. அமரர் கல்கி, டாக்டர் மு.வ. - விந்தனைப் பாராட்டி எழுதிய முன்னுரைகள் இந்தச் சுவடியில் இடம் பெறுகின்றன. மக்கள் கலைஞரின் முன்னுரை அவர் துணிவை எடுத்துக் காட்டுகிறது. மேலட்டையில் மக்கள் எழுத்தாளரின் வண்ணப்படத்தை வெளியிட்டுப் பெருமையடைகிறேன். ஒவ்வொரு சுவடியிலும் புகழ்பெற்றவர்களின், புகழ்மிக்க மகன்களிடம் கேட்டுசுப்ர. பாலன் எழுதுவதைப் பலர் பாராட்டுகிறார்கள். அமரர் த.நா. குமார சாமி நாதஸ்வரம் நன்றாக வாசிப்பார்? என்ற செய்தி எனக்கே புதுமையாக இருந்தது. தமிழ்ப் படைப்பாளர்களின் வரலாற்றில் அழியா இடம் பெறும் செய்திகள். 2 в இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005