பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதைக்கு பிரத்யேகமான அடையாளமாக இருந்தீர்கள். அதன் பின்னர் என்னவாயிற்று? இப்போதும் இருக்கிறேன். ஆசிரியர் விக்கிரமன், வலம்புரிஜான் ஆகியோரின் ஆதரவு என்னை எழுத வைத்தது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த உலகத்திலேயே புதுக்கவிதைக்கு அசைக்க முடியாத தலைவன் நான்தான். - பிறமொழி எதிர்ப்பை முன்னின்று நடத்திவிட்டு, தன் தலைமுறையை மட்டும் தமிழைத் தாண்டி அனுப்பி வைத்த 'மொழிக் காவலர்களின் மூளை குறித்து? தமிழ் செம்மொழியென இன்றைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக் கிறது. எனவே, எல்லாத் துறையிலும் தமிழால் சாதிக்க முடியும். இந்தக் கேள்வியை யாரையோ மனத்தில் வைத்துக் கேட்கிறீர்கள். யாராயிருந் தாலும் கண்டிக்கிறேன். *w 'கறுப்பு மலர்கள் மட்டும் போதுமா? இப்படி ஒரு பெரிய பரவலான கருத்து இருக்கிறது. வலம்புரி ஜான்கூட 'கறுப்பு மலர்களுக்குப் பின்பு நான் கவிதையே எழுத வேண்டியதில்லை என்றார். நேற்றுக் கூட ஒரு நண்பர் காட்டுக் குறத்தியைப் படித்து விட்டு. அது 'கறுப்பு மலர்களைவிட நன்றாக இருக்கிறது என்றார். One of the Best என்று சொல்லும்போது படைப்புகளில் ஒன்றைத் தான் எடுக்க முடியும். யுனஸ்கோ விருதைப் பெற்ற அந்தப் படைப்புக் குப் பிறகும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அது, ஏன் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை? - மொழிக்கும் வாசகனுக்கும் உண்மையாக இல்லாமல், பிறகெப்படி ஒரு படைப்பாளனால் யோக்கியத்தனத்தைப் பற்றி பேச முடிகிறது? எப்படியென்று எனக்குத் தெரியவில்லை. இதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். சாகித்ய அகாதமி, ஞானபீடம் வாங்குமளவு ஆள்பலம் இருக்கிறதா? நான் ஒன்றை முதலில் மறுத்துவிட விரும்புகிறேன். ஆள்பலம் என்பது எனக்கு மிகவும் அவமானமாகத் தெரிகிறது. சிறுகதை மன்னன் ஜெயகாந்தனோடு பேசும்போது, நீங்கள் ஏன் நோபல் பரிசு வாங்குமளவு ஒரு நூல் எழுதக்கூடாது? என ஆர்வமாகக் கேட்டேன். இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 47