பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுநர்களாகவும் அவ்வாடலின்போது உடன் ஆடுநர்களாகவும் அவ்வாடலுக்கு இசைகூட்டும் கருவிக் கலைஞர்களாகவும் கூடப் பேய்கள் திகழ்வதைக் காணமுடிகிறது. பேய்ச் சுற்றும் கொண்டவராய்ப் பேயுகந்து ஆடுநராய்க் காட்டப்படும் பெருமானின் பேய் நாட்டப் பின்னணியில் பேய்த்தொழிலாட்டி மிளிர்வதைப் பொருத்திப் பார்க்கலாம். இதுநாள் வரையிலும் அடையாளப்படுத்தப்படவில்லை எனினும் இனி, ஆய்வாளர்கள் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் வீரணக்குடி ஏந்திழையைத் தேடிப் பார்க்கலாம். கல்வெட்டுகளில், சிற்ப்க் காட்சிகளில் பேய்த்தொழிலாட்டியைக் கண்டறிய முயலலாம். சைவ சமய அறிஞர்களும் திருமுறை வல்லாரும் உரிய சான்று களுடன் இப்பேய்த்தொழிலாட்டி யார் என உணர்த்திக் கற்பனைகள் வளராமல் தடுக்கலாம். வரலாற்றின் பல முதல்களுக்குச் சொந்தக்காரராகத் திகழும் அப்பர் பெருந்தகை, சிவக்குடும்பத்தின் இளைய நங்கையை அறிமுகப்படுத்து வதிலும் முதல்வராகிச் சிறப்பது ஈண்டு கருதி மகிழத்தக்கதாகும். பயணம்... சாகாமல் சத்தியங்கள் நிமிர்ந்து வாழும் சாதனைகள் செய்தவர்நம் சாந்த மூர்த்தி! ஏகாதி பத்தியத்தைப் போகச் சொல்லி இறுதிவரை பொறுமையுடன் எதிர்த்தா ரிங்கே! போகாமல் அடம்பிடிக்கும் சாதிப் பேயைப் புறங்காட்டப் புதியதொரு போர்தொடுத்தார்! ஆகாத மதவெறிகள் அடங்கும் என்றே அரும்பாடு பட்டதனால் அமரர் ஆனார்: i بسناه

அடிவாங்கி உதைவாங்கி அறையும் வாங்கி அவமானம் அளவின்றி அதிகம் வாங்கி இடிதாங்கி யாயிங்கே எல்லாம் தாங்கி - இந்நாட்டில் சுதந்தரமாய் வாழும் வாழ்க்கை கொடிவாங்கி வானளாவப் பறக்க விட்டே, குடியாட்சித் தத்துவத்தை உலகம் போற்றும் படியோங்கச் செய்தவர்நம் காந்தி அண்ணல் பாதையிலே நாமெல்லாம் பயண மாவோம்!

52 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005