பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை இனிது முதுமை நன்று - யுகபாரதி ஓசை எஃப்' என்ற ஆங்கில எழுத்துக்குத் தமிழில் அதே ஓசை வரும் எழுத்து இல்லை. 'எப்' என்றோ 'எஃப்' என்றோதான் எழுதுகிறார்கள். இதுபோல சில உச்சரிப்பு எழுத்துகள் தமிழ் மொழியின் குறைவை வெளிப்படுத்துவதாக ஆங்கிலம் படித்த அறிவாளிகள் கருதுவதுண்டு. செய்தி வாசிக்கும் பெண்மணிகளின் உச்சரிப்பைக் கவனிக்கும் போது இந்தக் குறைகள் எனக்குத் தெரியவில்லை. ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அது பழக்கத்திற்கு வந்து விடும். அதன் மூலம் இக்குறைகளை நிவர்த்தி செய்யலாம். 'அய்யா' என்ற தமிழ்ச் சொல்லை உச்சரிக்கும்போது அது பயிலப்படுகின்ற இடத்தைப் பொருத்து மாறுபடுகிறது. ஓர் எஜமானனை அழைக்க அவனது வேலைக்காரன் சொல்லும்போது ஒருவிதமாகவும், ஆசிரியரை அழைக்க மாணவன் சொல்லும்போது வேறு விதமாகவும்தான் இருக்கிறது. தாய்த் தமிழ்ச் சொல்லுக்கே இப்படியென்றால் பிறமொழிகளைப் பயன்படுத்தும்போது இக்குறை தவிர்க்க முடியாதது. தமிழில் எழுத்துகள் குறைவுடையதென்ற கருத்து பாரதிக்கும் இருந்தது. பிறமொழிகளைப் போல, தமிழில் துருவ எழுத்துகள் இல்லை. துருவ எழுத்துகள் எனில் 'க' என்ற சொல்லுக்கு இணையான ஓசையுடைய பிற எழுத்துகள். இது விஷயமாகப் 'புதுச்சொல்லாக்கம்' பற்றிய கருத்தை மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் குறித்து பாரதி தமது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். இதே கருத்தை சுப்ரமணிய சிவாவும் கொண்டிருந்தார். 1914 ஆண்டு வாக்கில் இக்கருத்து விவாதத்திற்கு . வந்தது. பாரதியின் புதுச்சொல் ஆசைக்கு வ.உ.சி. தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்தார். “நம் பாஷையில் எழுத்துக் குறையென்று தமிழ் பாஷை இலக்கண இலக்கியங்களைக் கற்றவர் எவரும் கூறார் என்று இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 - 53