பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரப்பர் எம். தோத்தாத்ரி நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பல பொருள்களில் ரப்பர் முக்கியமான ஒன்றாகும். இன்று நம்மால் தவிர்க்க முடியாத இந்த ரப்பரைப் பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம். - - நமது வீடுகளில் புதுமனை புகுதல், ஆண்டு நிறைவு, திருமணம் போன்ற கொண்டாட்டங்கள், சுதந்தர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்கள் ஆகியவற்றின்போது நாம் பறக்கவிடும் பல வண்ண பலூன்கள், நம் குழந்தைகள் விளையாடுவதற்கான பந்துகள், பொம்மைகள், சின்னஞ்சிறு குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான நிப்பிள்கள், ஊர்திகளின் டியூபுகள், டயர்கள், பெண்களின் தலைமுடி மற்றும் கரன்ஸி நோட்டுகளைக் கட்டுவதற்கான வளையங்கள் (ரப்பர் பேண்ட்ஸ்), நாற்காலிகள், கட்டில்கள், மேஜைகளின் கால்களுக்கு கீழே பொருத்தப்படும் குமிழ்கள், வழவழப்பான தரைத் தளங்களில் போடப்படும் மிதியடிகள், மின்சாதனங்கள், மின் அடுப்புகள் பயன்படுத்தப்படும் அறைகளில் மின் காப்பானாகப் பயன்படும் பாய்கள், கைகள் மற்றும் கால்களுக்கான உறைகள் (க்ளவுஸ்), சமையலறைகளில் பயன்படுத்தும் பிரஷர் குக்கர்களின் காஸ்கெட்கள், மின்சாரம் பாயும் கம்பிகளின் பாதுகாப்பு உறைகள், உடைந்து போகாத வளையங்கள், சீப்புகள், பல வண்ணங்களில் தயாரிக்கப்படும் சோப்புப் பெட்டிகள், மருத்துவர்களின் கை உறைகள், ஒத்தடம் கொடுக்க உதவும் பைகள், நீர் பாய்ச்சப் பயன்படும் குழாய்கள், பேப்பர் வெயிட்கள், சூடான பானங்கள் அடங்கிய கண்ணாடி டம்ளர்களின் அடியில் வைக்கப்படும் தட்டுகள், விளம்பரத்துக்காகப் பறக்க விடப்படும் மிகப் பெரிய பலூன்கள் போன்ற கணக்கற்ற பொருள்கள் இன்று ரப்பர் கொண்டே செய்யப்படுகின்றன. கி.பி.11ஆம் நூற்றாண்டில் கிரிஸ்டோபர் கொலம்பஸ் எனும் ஆங்கில மாலுமி அமெரிக்கக் கண்டத்தை முதன்முதலில் கண்டு இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 55