பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுகிறது. இந்த அச்சுகளின் வடிவத்தில் திடமான ரப்பர் பொருள்கள் உண்டாகின்றன. கடற்பஞ்சு போன்ற மிருதுவான நுரைரப்பர் (ஃபோம் ரப்பர்) கூட்டப்பட்ட லேடக்ஸுடன் பொட்டாசியம் ஒலியேட் எனும் நுரையூட்டும் பொருளையும் சோடியம் ஃப்ளூரோ சிலிகேட் போன்ற ஊன் ப்சையாக்கும் பொருளையும் கலந்து, இக் கலவையை நுரை அடங்குமுன்வார்ப்புகளில் இட்டு வல்கனாக்கி தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய ரப்பர் துளைகள் மிகுந்து இருப்பதால் மிக மிக மிருதுவாகவும், அமுங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். சோஃபாக்கள், மெத்தைகள், தலையணைகள் மற்றும் கார்களின் இருக்கைகள் நுரை ரப்பர் கொண்டு செய்யப்படுவதால், பயணிட்டாளருக்கு அதிக சுகத்தை இவை அளிக்கின்றன. r இயற்கை ரப்பரின் உற்பத்தி அளவை விட, ரப்பரின் தேவை இன்று மிக அதிகரித்துள்ளதால், ரப்பருக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய, ரப்பர் போன்ற பல செயற்கைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு உபயோகத்தில் உள்ளன. ,” இவை ரப்பரைப் போலவே மீள்சக்தி பெற்றிருப்பதால் இவை 'செயற்கை ரப்பர் என அழைக்கப்படுவதற்குப் பதிலாக, 'எலாஸ்டமர்கள், அதாவது மீள் சக்தி உடையன என பொதுவாக அழைக்கப்படுகின்றன. பலவகை வேதிப் பொருள்களைக் கலந்து இவை தயாரிக்கப் முடுகின்றன. வேதிப் பொருள்களின் அளவுகளைக் கூட்டியும் குறைத்தும் நமக்குத் தேவையான பண்புகளைப் பெற்ற இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 59