பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலாஸ்டமர்கள் இன்று தயாரிக்கப்படுகின்றன. சில பண்புகளில் இவை இயற்கை ரப்பரை விடவும் சிறந்தவையாக உள்ளன. பூனா எஸ், பூனா என், தியோக்கால், ரியோப்பிரீன், ப்யூட்டில் ரப்பர் போன்ற பல பெயர்கள் கொண்ட இவ்வகை எலாஸ்டமர்கள் இன்று உபயோகத்தில் உள்ளன. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இய்ற்கை ரப்பர் விளையும் நாடுகள் பல, நேச நாடுகள் வசம் இருந்ததால், ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அவற்றின் ஊர்களுக்குத் தேவைப்பட்ட ரப்பர் போதுமான அளவு கிடைக்கவில்லை. அப்போது அந்நாட்டு விஞ்ஞானிகளின் விடாமுயற்சியாலும், கடும் உழைப்பினாலும் இத்தகைய மாற்றுப் பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றின் விலை மலிவு. எனவே, இப்போது கூட இவ்வகை எலாஸ்டமர்களை நாம் பல வகையில் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக 'பூனா எஸ் கால்ணிகள், ஊர்திகளின் டயர்கள் செய்யவும், எண்ணெய்த் தொட்டிகளின் உட்புறப் பூச்சாகவும் பயன்படுகிறது. தியோக்கால் மின் கம்பிகளுக்குக் காப்பான் ஆகவும், காஸ்கெட்கள் தயாரிக்கவும் உதவுகிறது. ப்யூட்டில் ரப்பர் வாயுக்களைக் கசிய விடாத தன்மை பெற்றிருப்பதால் ஊர்திகளின் டியூப்கள் தயாரிக்க மிகுந்த அளவில் பயன்படுகிறது. தொழிலங்களின் ரப்பர் கழிவுகள், கிழிந்த அல்லது உடைந்து போன ரப்பர் பொருள்கள் ஆகியவற்றை சோடியம் ஹைடிராக்ஸைடு கரைசலுடன் கொதிக்க வைப்பதன் மூலம் அவற்றிலுள்ள ரப்பரை மீட்க முடியும். இப்படி மீட்கப்பட்ட ரப்பர், புதிய ரப்பர் கலவையுடன் கலக்கப்பட்டு, தரத்தில் சற்று குறைவான ரப்பர் பொருள்கள் செய்யப்படுகின்றன. பெரும் பாலும் ரப்பர் வளையங்கள் (ரப்பர் பேண்டு), ஒட்டுவதற்கான பசைகள் (அடிசிவ்ஸ்) தயாரிக்க இது பயன்படுகிறது. ஒரு மரத்தின் பிசினைக் கொண்டு தயாரிக்கப்படும் ரப்பரின் இத்தனை சிறப்புகளையும், பலன்களையும் எண்ணுகையில், மனித முயற்சியால் ஆகாதது எதுவுமில்லை என உணர்கிறோம். எனவே, ரப்பருக்கு மட்டுமன்றி, உலகுக்கு அதை அறிமுகப் படுத்திய கொலம்பஸ்-க்கும்கூட நாம் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம். Ο 60 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005