பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைத்துப் பார்க்கிறேன். கலைமாமணி விக்கிரமன் முதலிலேயே விலகிவிட்டேன் வித்வான் வே. லட்சுமணனின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு எனக்கு எதிலும் நம்பிக்கை குறைந்து வருகிறது. நம்பிக்கை என்று ஒன்றிருந்தால்தான் பற்று, பாசம், அன்பு, ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கும். நம்பிக்கை ஏன் குறைகிறது? எதிர்பார்த்த செயல் ஏதும் நடக்காத காரணத்தால் இருக்குமா? பணவரவு போதவில்லையா? புகழும், பதவியும், வெற்றியும் நினைத்தபடி நடக்கவில்லையா, கிடைக்கவில்லையா? அவையெல்லாம் இல்லை. பதவி, பரிசு, பணம் இவற்றை நான் நினைப்பதில்லை. கிடைக்குமென்று எதிர்பார்ப்பதுமில்லை. கிடைக்காது, வராது, நடக்காது என்றுதான் நினைப்பேன். எதிர் மறையாக ஆகிவிட்டால் வருத்தம் வராது. நடந்து விட்டாலோ, வெற்றி ஏற்பட்டு விட்டாலோ சாதாரணமாகவே ஏற்பேன். 'நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பால் நடந்துவிடும்' என்ற பாடல் என்வரையில் உண்மை. 'உன் வாழ்க்கைத் தத்துவத்திற்கும் நம்பிக்கைக் குறைவுக்கும் என்ன தொடர்பு? தனிப்பட்டவருக்கு ஏற்படும் விளைவுகளைக் கொண்டு, பொதுவாக முடிவு செய்யக்கூடாது' என்று நீங்கள் சொல்வது, கேட்கிறது. . . நம்பிக்கை குறைய்க்கூடாதுதான். முயற்சியுடையவர்கள், இறை நம்பிக்கையுடையவர்கள், நல்லதே நினைப்பவர்கள். நம்பிக்கை மீது அழியாத நம்பிக்கை வைக்க வேண்டும். ஆம்; ஒப்புக் கொள்கிறேன். நானும் அப்படித்தான். இதுவரை நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டிருந்தேன். சாவு', 'மரணம் ஏற்படுவதால் உலகத்தின் மீது பற்று கொள்வதனின்று நழுவி விடக் கூடாது. - 'இன்றைக்கிருப்பவர் நாளைக்கு இல்லை என்ற பெருமையுடையது இவ்வுலகம்' என்று வள்ளுவர் கூறினாலும், நாளையைப் பற்றி நமக்குத் தெரியாது என்றாலும் நம் அன்றாட வாழ்க்கையை அனுபவிக்காமல் விட்டு விடுவதில்லை. இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 • 61.