பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்து என்னை அமுதசுரபி'யில் சேருமாறு பணித்தார். 1948ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் நாள் காலையில் மேலே கதர்த் துண்டை அணிந்து கொண்டு, சென்னை, உயர் நீதி மன்றம் எதிரிலுள்ள சுங்குராம செட்டி தெரு, ஏழாம் எண் கட்டடத்திற்குள் நுழைந்தேன். 'அமுதசுரபி' என்ற பெயர்ப் பலகையும், ‘ராஜன் எலெக்ட்ரிக் பிரஸ் என்ற பெயர்ப் -- - M. 畿 பலகையும் தாங்கி நின்ற அந்தக் கட்டடத் ஓவியர்ஸுபா திற்குள் பலமுறை சென்றிருந்தாலும் 'அமுத சுரபி' இலக்கியப் பத்திரிகை அலுவலகத்திற்குள் அன்று நுழையும் போது பயபக்தி ஏற்பட்டது. - - பெரிய மேஜை எதிரே உரிமையாளர் திரு. டி.கே. சாமி உட்கார்ந்திருந்தார். உள்ளே தள்ளு கதவின் பின்புறம் விசாலமான கூடத்தில் அச்சு இயந்திரங்கள் தடால். தடால் என்ற ஓசையை எழுப்பி இயங்கிக் கொண்டிருந்தன. - வண்ண அட்டைகளை அச்சிடும் டிரெடிலை, அச்சுத் தொழிலாளி காலால் மிதித்து இயக்கிக் கொண்டிருந்தார். அதற்குப் பின்பக்கக் கூடத்தில் பெரிய வெட்டு இயந்திரம் (கட்டிங் மிஷின்) 'சர், டக் என்று காகிதத்தை இரண்டாக - நாலாக வெட்டுவதுடன், புத்தகத்தின் மூன்று ஓரங்களையும் மழமழவென்று வழித்துத் தள்ளுவதையும் செய்து கொண்டிருந்தன. வெட்டப்பட்ட துண்டுகள் (ஜல்லி) மலை போல் குவிந்து கொண்டிருந்தன. அச்சடித்த பக்கங்களை ஓர் ஒரமாக சிறுவர்கள் மடித்துக் கொண்டிருந்தார்கள். அது பைண்ட் செய்யப்படும் கூடம். டி.கே. சாமிக்கு வணக்கம் தெரிவித்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். - டி.கே. சாமி என்றழைக்கப்படும் டி. கிருஷ்ணசாமி முதலியார் மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்றார். "நீங்கள் வருவீர்கள் என்று ஆசிரியர் சொன்னார்' என்று மலர்ந்த முகத்துடன் பேசினார். பதிவு செய்யப்பட்ட ஆசிரியர் அவர். ஆனால் வே. லட்சுமணனை ஆசிரியர் என்றே அழைத்தனர். அவர் அருகே அவர் இளவல் டி.கே.எஸ். மணியம் அமர்ந்திருந்தார். இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 63