பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை ததும்பும் முகம், தூய கதராடை அச்சக நிர்வாகத்தின் பெரும்பகுதி அவருடையது. "ராகுகாலம் ஒன்றும் இல்லையே' என்று டி.கே. சாமி கேட்டு விட்டு, தன் சகோதரரைப் பார்த்து "சாருக்கு மேஜை, நாற்காலிக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டார். பள்ளி இறுதி வகுப்பை முடித்து விட்டு நான் வேலை தேடிச் செல்வது, இது மூன்றாவது இடம். முதன்முதலில், ஸ்பென்ஸர் கம்பெனிக்கு விண்ணப்பம் அனுப்பினேன். மிக மும்முரமான போர்க்காலம் போர், ஒரு முடிவுக்கு வரும் தருணம். பொருள் தட்டுப்பாடு அதிகம். யுத்த பீதி குறையவில்லை. இந்தியாவுக்கு விடுதலை பெறப் பல முனைகளிலும் காங்கிரஸ் கட்சி முயன்று கொண்டிருந்தது. என் தந்தை இறந்து ஓராண்டாகி விட்டது. என் தாய்மாமன் உதவியை எவ்வளவு காலம் எதிர்பார்க்க முடியும்? பல்வேறு இடங்களில் வேலைக்கு முயன்றேன். எனக்காகப் பலர் பல்வேறு இடங்களில் சிபாரிசு செய்தனர். சென்னை மெடிக்கல் ஸ்டோர்ஸ், பி ஆர் அண்ட் சன்ஸ், பாரி கம்பெனி, சிம்ஸன் கம்பெனி, மிலிடரி கணக்கு தணிக்கை இலாகா... இப்படி வருமானத்திற்கு வழி தேடுவது ஒருபுறம். மறுபுறம் இலக்கியத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டேன். பள்ளியில் எனக்கு அறிமுகமான ஸபா அவர்களுடன் சேர்ந்து தமிழ்ச்சுடர் இதழை மிகச் சிறப்பாக நடத்தி வந்தேன். - விண்ணப்பம் அனுப்பியதில் பலன் ஏதுமில்லை. அந்தப்போதில் சென்னையில் மவுண்ட்ரோடில் (இப்போது அண்ணாசாலை) பிரபலமான ஸ்பென்ஸர் கம்பெனியில் குமாஸ்தா பதவிக்கு விண்ணப்பம் பெற்று நியமிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். சைதாப்பேட்டையினின்று என் நண்பர்கள் சிலருக்கு விண்ணப்பம் அனுப்பிய மறுநாளே வேலையில் சேருமாறு உத்தரவு வந்து விட்டது. நானும் உடனே விண்ணப்பம் அனுப்பினேன். ஒரு வாரமாகியும் பதிலில்லை. விசாரித்ததில் சைதாப்பேட்டையிலிருந்து ஏழெட்டு பேருக்கு வேலை கொடுக்கப்பட்டதால், சைதாப்பேட்டையில் வசிப்பார்கள் விண்ணப்பத்தைக் கவனிக்காமல், கட்டி வைத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். நான் ஒரு யோசனை செய்தேன். 64 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005