பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்க முடியாத நிகழ்ச்சி: மகாத்மாவை வணங்கிய கே.பி. சுந்தராம்பாள் பிரபல பாடகி கே.பி. சுந்தராம்பாள் கணிரென்ற குரலில் பாடி, லட்சக்கணக்கான ரசிகர்களை அந்தக் காலத்திலேயே ஈர்த்தவர் புகழ்பெற்ற நாடக நடிகர், திரைப்பட நடிகர் என்பவை எல்லாம் இருக்கட்டும். அவர் சிறந்த தேசப்பற்று மிக்கவர். புகழ்மிக்க ஜி.ஏ. நடேசன் அவர்கள் சென்னை, தம்பு செட்டி தெருவிலிருந்து, மயிலாப்பூர் லஸ்ஸுக்கு புது வீடு கட்டிக் கொண்டு இடம் மாறினார். மங்கள விலாசம் என்று பெயர். இப்போதுள்ள நாகேசுவரராவ் பூங்கா பல ஆண்டுகளுக்கு முன்பு குட்டையாகத் திகழ்ந்தது. அதன் அருகே மாளிகை போன்ற வீடு மங்கள விலாசம்’. அந்த வீட்டிற்கு தேசபிதா மகாத்மா காந்தி விஜயம் செய்ததை நினைவுகூர்ந்து திருமதி ஜானகி சுப்பிரமணியம், மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார். மகாத்மா காந்தி அங்கு வந்தது அறிந்த திருமதி கே.பி. சுந்தரம் பாள் அவரைத் தரிசித்து வணக்கம் தெரிவிக்க வந்தார். மகாத்மாவின் காலில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிய அம்மையாரை, மகாத்மா தூக்கி நிறுத்தினார். அப்போது கணிரென்ற குரலில் பாடலொன்றைப் பாடினார், கே.பி.எஸ். 'காந்தியோ பரம ஏழை சந்நியாசி கருதும் சுதந்திர ஞான விசுவாசி ஆழ்ந்த சக்தியுடைய ராட்டினத்தாலே அடிமை அகற்ற வந்தார் அன்பாய் முன்னாலே தாழ்ந்த சோதரர்கள் தாய் தந்தை போலே தரணியில் அவதாரம் செய்தார் அக்காலே...' (பிரபல பத்திரிகையாளரும் தேசத் தொண்டருமான ஜி.ஏ. வைத்ய ராமய்யரின் (ஜி.ஏ. நடேசனின் மூத்த சகோதரர்) பெண் லட்சுமி யம்மாள். அவருடைய கடைசி பெண் திருமதி ஜானகி சுப்பிர மணியம். மகாகவி பாரதியின் பாடல்களை கணிரென்று பாடுபவர். அந்தப் பாடல்கள் ஒலிநாடாவாக வெளிவந்துள்ளது) 4 е இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005