பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே மாதிரியான கையெழுத்து. எல்லாவற்றையும் விட ஒரே நிற 601s). வண்ண இங்க்'குகளை பயன்படுத்துவதில் எனக்கு வேட்கை அதிகம். 'வையலட் வண்ண இங்க்கில்தான் எல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். “தாம்பரத்திலிருந்து வந்த உன் விண்ணப்பத்தைப் பார்த்தவுடன் எனக்கு மனத்தில் பளிச்சிட்டது. இந்தக் கையெழுத்து, இதே இங்க்கை பார்த்து அந்த விண்ணப்பத்தைத் தேடி எடுத்தேன். ஒப்பிட்டேன். சைதாப்பேட்டையிலிருந்து அனுப்பிய விண்ணப்பத்திற்கு நேர்முக அழைப்பு கிடைக்கவில்லை என்றவுடன் இப்படி ஒரு தந்திரம் செய்தாயா?” என்று கேட்டார். - நான் மிகவும் பயந்து போனேன். சாமர்த்தியம் என்று நினைத்து செய்த தவற்றை அவர் கண்டுபிடித்து விட்டாரே! "மிஸ்டர் வேம்பு கவலைப்படாதே. உன்னைப் பற்றி உன் ஊரிலிருந்து வருபவர்களிடம் விசாரித்தேன். சைதாப்பேட்டையில் நீ பாப்புலராம். மிகவும் ஏழைமையான குடும்பமாம். சுறுசுறுப்பு மிக்கவராம். அதனால், நேர்முகப் பேட்டிக்கு அழைத்தேன். உன் தகுதியைப் பற்றியும் கேள்விப்பட்டேன். 'பாஸ் செய்து விட்டாய். இன்று முதல் உனக்கு இங்கு வேலை. இருபது ரூபாய் சம்பளம். "இன்வாய்ஸ் டிபார்ட்மெண்ட் என்றழைக்கப்படும் - மேல் நாட்டுப் பண்டங்களைக் கப்பலிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பட்டியலைச்சரிபார்க்கும் வேலை. திறமையுடன் சுறுசுறுப்பாக இயங்கு வாழ்த்துகள்' என்றார். இரண்டாண்டுகள் ஸ்பென்ஸர் கம்பெனியில் பணியாற்றினேன். அந்தக் கட்டடத்திலுள்ள அத்தனை துறை உயரதிகாரிகளுடனும் பழகினேன். - என் இலக்கியத் தாகம் ஸ்பென்ஸரை விட்டு விலகுமாறு செய்தது. அங்கிருந்த ப்ோது தமிழ்நாடு கையெழுத்துப் பத்திரிகையாளர்கள் சங்க மாநாட்டை 'கல்கி துணையாசிரியர் நாட்ோடி தலைமையில் நடத்தினேன். சென்னையிலுள்ள பாரதி சங்கங்களைச் சேர்த்து 'பாரதி சங்கங்கள் சம்மேளனம் என்ற சங்கத்தைத் தொடங்கி, அதன் விழாவை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தலைமையில் (இப்போது 'தினகரன் பத்திரிகை இருக்கும் கச்சேரி சாலை அலுவலகத்தில்) நடத்தினேன். இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 67