பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து போகிறது; சந்தர்ப்பங்களைத் தானே ஏற்படுத்திக் கொள்வதில் தமிழ்நாட்டு ‘மாமியார் நெப்போலியனுக்கு நிகராகிறாள்; வாழ்வதற்காகப் பிரார்த்தனை செய்வதை விடச் சாவதற்குப் பிரார்த்தனை செய்வது கட்டாயமாகிறது; கூடைக் காரியாக வியாபாரம் செய்கிறவள் அரிச்சந்திரனைப் பின்பற்ற விரும்பித் தோல்வி அடைந்த பின் புதிய வழி காண்கிறாள். பொருளாதார ஏற்றத் தாழ்வு என்ன என்ன தீமைகளைச் செய்கிறது என்பதை ஆசிரியர் பல இடங்களில் படம் பிடித்துக் காட்டுகிறார். குழந்தைகளின் வாழ்க்கை முதல் காதலர்களின் வாழ்க்கை வரையில் எல்லாருடைய வாழ்க்கையையும் பொருளாதார நிலைமை எப்படி எப்படி ஆட்டி வைக்கிறது என்பதை அவருடைய கதைகள் தெளிவாக்குகின்றன. காதல் எதன் மேல், எதுவரையில் என்றெல்லாம் கதைகள் விளக்குகின்றன. கவிதையிலே காவியத்திலே கதைகளிலே சாகாத காதல் வாழ்க்கையிலே பணப் போரில் சாவதை ஆசிரியர் எடுத்துக் காட்டுவது போற்றத்தக்கது. வாழ்க்கையில் உள்ள இத்தகைய உண்மைகளை மறைப்பது குற்றம் என்று ஆசிரியர் உணர்ந்து எழுதுவதற்காக, உலகம் அவருக்கு நன்றி கூற வேண்டும். இப்படிப்பட்ட சிறந்த கதைகளைத் தெளிவாக எளிய தமிழில் உணர்ச்சி வேகத்துடன் எழுதிக் கலைத் தொண்டு புரியும் 'விந்தன் முயற்சி மேன்மேலும் வளர வேண்டும். அவர் ஓயாமல் படித்துவரும் இந்த 'உலகம் என்னும் புத்தகம் நாள்தோறும் புதிய புதிய உண்மைகளை அவருக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். சென்னை - 2.1.50 ('விந்தன் கதைகள் நூலிலிருந்து. வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 600 017) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல். (52) குடும்பத்திற்குரிய நல்லதன்மை மனைவியிடத்து இல்லையானால் குடும்பம் - பெருமையடையாது. o • گسیص பரு து ருநீராம் சிட்ஸ் தமிழ்நாடு (பி) லிமிடெட்