பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1947ஆம் ஆண்டு வெளிவந்த “வேலை நிறுத்தம் ஏன்? என்ற கட்டுரைகள் தொகுப்பில் விந்தனின் முன்னுரை Tென்னை எழுத்தாளன்' என்று சொல்லிக் கொள்வதை விட 'தொழிலாளி என்று சொல்லிக் கொள்வதில் நான் எப்பொழுதுமே பெருமையடைபவன். ஏனெனில், என்றைக் காவது ஒருநாள் இந்த நாட்டு அரசியல் - ஏன், உலக அரசியலே கூட - தொழிலாளிகளின் கைக்குத்தான் வந்து சேரப்போகிறதென் பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது. அப்படியிருக்கும்போது யார்தான் தன்னைத் தொழிலாளி என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடையாமல் இருக்க முடியும்? ஆனால், எந்தக் கட்சியையும் நான் சேர்ந்தவனல்ல என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்றாலும் எந்தக் கட்சி, தொழிலாளிகளுடைய நலனுக்காக தன்னுடைய நேரத்தை அதிகமாகச் செலவிடுகிறதோ, எந்தத் தலைவர்கள் தொழிலாளி களுடைய நலனுக்காகத் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணம் செய்கிறார்களோ - அந்தக் கட்சியிடம், அந்தத் தலைவர்களிடம் - என்றுமே எனக்கு அனுதாபம் உண்டு. சமீப காலத்தில், தமிழ்நாட்டில் எழுந்த வேலை நிறுத்தப் போராட்டங்களின்போது என் உள்ளத்தில் எழுந்த எண்ணங் களைத்தான் இந்தப் புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறேன். ஆனால், என்னுடைய எண்ணங்கள், அபிப்பிராயங்கள்தான் சரியானவை என்று நான் சாதிக்கவில்லை. அபிப்பிராய பேதங்களுக்குச் செவி சாய்க்காத யார்தான் உண்மையான ஜனநாயகவாதியாக வாழ முடியும்? ஆகவே, இந்தப் புத்தகத்தைப் படிக்கும் நேயர்கள் என்னுடைய அபிப்பிராயங்களை அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்பவில்லை. ஆனால், படிக்கும் நேயர்களின் சிந்தனையை இந்தப் புத்தகம் சிறிதளவாவது தூண்டி விட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என்னுடைய விருப்பத்தை இந்தப் புத்தகம் எவ்வளவு தூரம் நிறைவேற்றி வைக்குமோ... நான் அறியேன். 16.4.1947 விந்தன் 72 е இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005