பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கல்கி'க்கு முதல் நன்றி என்னுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், வளத்துக்கு நீரூற்றாகவும், அன்புக்கு உறைவிடமாகவும், ஆர்வத்துக்குப் பிறப்பிடமாகவும் உள்ள ஆசிரியர் 'கல்கி அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றி முதலில் உரியதாகும். அடுத்தபடியாக என்னுடைய நினைவில் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றிருப் பவர்கள் தமிழர்கள். பொருளாதாரச் சீர் கேட்டினால் இன்று அவர் களுடைய வாழ்க்கை எத்தனையோ விதமான தொல்லைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. அத்தனை தொல்லைகளுக்கிடையிலும் நான் எதிர்பாராத அளவு எனக்கு ஆதரவு காட்டிவரும் அவர்களுக்கு நன்றி மட்டுமல்ல; எஞ்சியுள்ள வாழ்நாள்களும் உரியவை. இன்னும் முகமறிந்த நண்பர்கள் - முகமறியாவிட்டாலும் அகமறிந்த நண்பர்கள் பலர் தென்னாட்டிலும் வட நாட்டிலும் கடல் கடந்த பிரதேசங்களிலும் மூலைக்கு மூலை இருக் கிறார்கள். அவர்கள் என்னுடைய கதைகளைப் படிப்பதோடு வாழ்த்தியும் வைதும் கடிதம் எழுதுகிறார்கள். அதன் மூலம் கூம்பும் உள்ளம் மலர்கிறது; தேயும் நம்பிக்கை வளர்கிறது; செல்லும் பாதை செப்பனிடப்படுகிறது. எந்தவிதமான பிரதிபலனுமின்றி எனக்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிரமத்துக்கு என்னுடைய நன்றியையாவது இந்தச் சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தற்சமயம் தமிழ்நாடு இருக்கும் நிலையில் ஏற்கெனவே ஒரு பிரபல பத்திரிகையில் வெளியான கதைகளைப் புத்தகமாக வெளியிடுவதற்கு அசாத்தியத்துணிச்சல் வேண்டும். அது மட்டுமிருந் தால் போதாது; அளவு கடந்த அன்பும் வேண்டும். அத்தகைய அன்பை என்மீது தொடர்ந்து செலுத்தி வரும் நண்பர்கள் - பிரசுராலயத்தின் நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றி உரியது. நான் படிக்கும் உலகம் என்னும் புத்தகம் நாள்தோறும் எனக்குப் புதிய புதிய உண்மைகளை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டுமென்று தம் முன்னுரையில் வாழ்த்தி வரங் கொடுத்திருக்கும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கும் கடைசியாக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நேயர்களிடமிருந்து இப்போதைக்கு விடை பெற்றுக் கொள்கிறேன். - 3.1. 1950 விந்தன் இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 73