பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானம் காத்தான் மனம் பொறுக்குமா? நடப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. என்ன செய்யலாம்? ஒன்றுமே தோன்றவில்லை. தலைவரிடம் போய்ச் சொல்லலாமா? அவர் மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்? தலைவர் சட்டமன்ற உறுப்பினரிடம் போகலாம் என்பார். கூட்டத்தைக் கூட்டுவார். வருகிற கூட்டம் முழுவதும் ஒதுங்கி வெயிலில் காய்ந்து நிற்க, உள்ளே குளிர்பானம் அருந்திப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஏதாவது சொல்லி அனுப்புங்க" என்பார்கள். சிரிப்பார்கள். சிரித்தவாறே வெளியில் வருவார்கள். ஊரின் சிரிப்பெல்லாம். அங்கே திரண்டு வந்து குடிபுகுந்தது போலத் தோன்றும். 'வறட்சி நிவாரண வேலைகள் தொடங்கப் போகுது. அப்பொழுது எல்லாருக்குமே வேலை கிடைக்கும். கூலியும் அரசாங்கச் சட்டப்படி கிடைக்கும். கூலியைக் குறைத்துக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. பொறுத்திருங்கள். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் உரிய நடவடிக்கை எடுப்பார்!" கூட்டம் கைதட்டும்; கைதட்ட வேண்டும். இல்லாவிட்டால் அழைத்து வந்த தலைவருக்கு மரியாதை இருக்காது. அவர் எப்பொழுது நடவடிக்கை எடுப்பது, எப்பொழுது வறட்சி நிவாரண வேலைகள் தொடங்குவது, வேலை செய்வது, கூலி வாங்குவது, பசியும் பட்டினியுமா அரிசி வாங்க ஓடுவது, ஒட்டிய வயிற்றுடன் குடிசைகளில் அமர்ந்து கதை பேசிக் 0 ச. கலியாணராமன் 0 இலக்கியப்பீடம் சிறுகதைப் போட்டி 2004 பிரசுரத்துக்குத் தேர்வுபெற்ற சிறுகதை இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 77