பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடகக்கும் மக்களுக்கு உழவுத் தொழிலையே நம்பி வாழ்ந்து விட்ட மக்களுக்கு எப்பொழுது கஞ்சி கிடைப்பது? பெரியவர்கள் நிலைமையை விட சிறுவர், சிறுமியர் பாடு தான் கண்ணராவி காட்சி. குளம் குட்டைகள் வறண்டு போகாமல் இருந்தால் குத்தகைக்காரர்கள் மீன் பிடித்து முடிந்த பிறகு நண்டு நத்தைகளாவது கிடைக்கும். காசு செலவில்லாமல் கிடைக்கும். பள்ளிக்கூடங்களுக்குப் போகாவிட்டாலும் பெயரையாவது கொடுத்து வைக்கச் சொன்னதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டார்கள். பள்ளிக்கூடங் களில் பெயர் கொடுத்திருந்தால் இப்பொழுது மதிய உண்வுத் திட்டத்தின் படியாவது சோறு கேட்டுத் தலைமையாசிரியரிடம் சண்டை போடலாம். அதற்கும் வழியில்லை. 'பள்ளிக்கூடம் வருகிறவர்களுக்குத்தானே மத்தியான சோறு போட முடியும்? பள்ளிக்கூடத்தில் பேரே இல்லாத பிள்ளை களுக்கு நான் எந்தக் கணக்கில், எப்படிய்யா சோறு போட முடியும்?’ என்ற கேட்க மாட்டார்களா? எந்த வகையிலும் வழியில்லை. திறந்து கிடந்த வழிகளை அடைத்துப் போட்டவனே இப்பொழுது அடைப்புக்குள் மாட்டிக் கொண்டு தவிப்பதாக எண்ணினான். மான உணர்ச்சியை விழிக்க வைத்தவன். ஆண்டானும் இல்லை; அடிமையும் இல்லை என்று முழங்கியவன். உழைத்து ஊதியம் பெற்று உண்ணச் சொன்னவன். இன்று உழைக்கவும் வழியில்லை; ஊதியம் பெறவும் வழியில்லை. உழவுத் தொழிலைத் தவிர வேறு வேலை அறியாதவர்கள். தொழிலே இல்லை; கூலியும் இல்லை. சோற்றுக்கும் வழி யில்லை. மக்கள் ஆலாய்ப் பறந்தனர். குழந்தைகள் கண்டதைத் தின்றனர். தோப்பு துரவுகளில் திரிந்தனர். சிறுவர் சிறுமியருடன் வறண்ட வயல்களின் நண்டு வளைகளில் எலிகளையும் நண்டுகளையும் தேடி அலைந்தனர், முடியாத முதிர்ந்தவர்கள். இந்தக் கேடுகளைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மாயிருக்க முடியும்? எந்தத் தலைவரைப் பார்த்தாலும் ஒரு வேலையும் நடக்க வில்லை. ஒருவரையொருவர் கைகாட்டி விட்டுப் போய்க் 78. இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005