பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருந்தனர். வறட்சி நிவாரண வேலைகள் தொடங்கப் போகின்றன. ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன. பணம் ஒதுக்கியாகிவிட்டது. இதோ, அதோ என்றெல்லாம் பேச்சு அடிபட்டதோடு சரி. அரசாங்க ஆமை இருந்த இடத்தை விட்டு நகர்ந்து வரும் பாட்டைக் காணோம். அதற்குள் அவசரப்பட்டு சிறுமி ஒருத்தி இறந்து போனாள். ஏதோ காயலா என்று சொன்னார்கள். 'என்னடா ஆச்சு?’ என்று கேட்கச் சென்றபோது வயிற்றுக் கோளாறு என்றான் பெற்றவன். இரண்டொரு நாளில் சிறுவன் ஒருவன் செத்து விட்டான். அவன் சோற்றுக்கு இல்லாமல்தான் செத்தான் என்று பேசிக் கொண்டார்கள். அது எப்படிச் சொல்லலாம்?' என்று அரசாங்க அதிகாரி ஜீப்பில் வந்து இறங்கினார். சிறுவனைப் பறி கொடுத்த வீட்டைக் குடை குடை என்று குடைந்து தள்ளினார்கள். "பையனுக்கு வயித்து வலி இருந்ததுங்க. திடீர்னு செத்துப் போயிட்டான். ' 'ஆசுபத்திரிக்கு அழைச்சுகிட்டுப் போனியா?" 'ரெண்டாவது நாளு அழைச்சுகிட்டுப் போனேனுங்க." 'மருந்து கொடுத்தாங்களா?" 'ஏதோ குடுத்தாங்க." 'மருந்தை ஒழுங்கா குடுத்தியா?" சாப்பாட்டுக்கு முன்னாலேயும் அப்புறமும் கொடுக்கச் சொன்னாங்க. நான் என்னத்தைச் சாப்பாட்டைக் கொடுக்கறது?" 'மருந்தைக் கொடுத்தியா இல்லையா?” 'ஒரு நாளு குடுத்தேன்." 'தொடர்ந்து ஏன் ஆசுபத்திரிக்குப் போகலை?" 'அரை நாளு போயிடும் ஆசுபத்திரிக்குப் போயிட்டு வரதுக் குள்ளே... நாங்க வயத்துக்குத் தேடுவோமா, ஆசுபத்திரிக்கு அலைவோமா?" 'வயிற்றுவலியாலேதானே உன் மவன் இறந்து போனான்? இதிலே கையெழுத்துப் போடு." இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 79