பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கை நாட்டு தாங்க...' 'ஏதோ ஒண்னு போடு!" கையொப்பம் பெற்றுக் கொண்டு ஜீப் புறப்பட்டுப் போய் விட்டது. அறிக்கை அவசரமாகக் கொடுக்க வேண்டும். மானம் காத்தானுக்கு மனம் பொறுக்கவில்லை. 'ஏன்டா, உன் மவனுக்கு வயத்து வலி எப்போதுமே உண்டா?" . 'கிடையாது. இப்போதான் சோத்துக்கு இல்லாமே கண்டதையும் தின்ன ஆரம்பிச்சதுக்குப் பொறவு...' கண்டதையும்'னா?" 'ஒரு நாளு எலிக்கறி தின்னமா...' அட முண்டம், அதை ஏன்டா அந்த ஆபீசருகிட்டே சொல்லலை?" - - "நாங்க எல்லாரும்தான் தின்னோம்.” 'ஏன்டா பெரியவங்களுக்கு ஒத்துகிட்டது?" 'விதி... போய்ச் சேர்ந்துட்டான்' “என்ன சாப்பிட்டேன்னு ஆசுபத்திரியிலே கேட்கலையா?" "ஒண்ணும் கேட்கலை. இருக்கிற கூட்டத்திலே என்ன கேட்கிறாங்க?" மகனைப் பறி கொடுத்தவனிடம் தன் பங்குக்கு ஒன்றும் குடையக்கூடாது என்று ஆறுதலை மட்டும் கூறிவிட்டு வந்த மானம் காத்தான் துண்டை விரித்துப் போட்டுக் குடிசையின் ஒட்டுத் திண்ணையில் படுத்துவிட்டான். - வறட்சி நிவாரண வேலைகள் தொடங்குவதாகக் கூறி ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குள் தெருவில் இன்னும் எத்தனைச் சாவு விழுமோ? என்னவோ, மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்கத் தின்றுவிட்டு, உடம்புக்கு ஏதாவது என்றால் தனியார் மருத்துவ மனையில் பெரிய மருத்துவர்களிடம் உடம்பைக் காட்டிச் 80 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005