பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனைகள் செய்து கொண்டு, விலை உயர்ந்த மருந்துகளை வாங்கி விழுங்கி விட்டு அதன் பிறகு உடம்பு தேறாமல் செத்துப் போவதாகக் கணக்கிட்டுப் பட்டினிச் சாவு இல்லை என்று மிக எளிதாகக் கூறி விடுகிறார்கள். அவர்கள் மீது குற்றமில்லை. பட்டினிச்சாவு என்று அவர்கள் கணக்கிடுவது எதுவுமே உண்ணாமல் முழுப் பட்டினியாகக் கிடந்து துளித்துளியாகச் செத்துப் போவது. அதுபோல யாருமே சாவதில்லை. பசியின் கொடுமையால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாத எதையாவது தின்றுவிட்டு முறையான மருத்துவமும் செய்து கொள்ள வழியில்லாமல் செத்துப் போவதே அதிகம். அது பட்டினிச் சாவில் சேராது. அவர்களுடைய கணக்குகளும் பொய்களும் ஏமாற்று வேலைகளும் எப்படியோ போகட்டும். மானம் காத்தான் தன் மக்களுக்கு மான உணர்ச்சியை ஊட்டியது போலவே இப்பொழுது அவர்களைப் பட்டினியின் கொடுரப் பிடியி லிருந்தும் காப்பாற்றியாக வேண்டும். அந்தக் கடமை அவனுக்கிருக்கிறது. திண்ணையில் துயருடன் உருண்டு கிடந்த மானம் காத்தான் பொழுது போய் இருட்டியதற்குப் பிறகு எழுந்தான். தெரு முழுவதும் இருட்டு. தொலைவில் தெருமுனையில் உள்ள மின் விளக்கு வழக்கமாக ஒன்பது மணிக்குப் பிறகுதான் மினுக்கும். இருட்டோடு நடந்து குடியானவத் தெருவில் நுழைந்து ஒரு சந்து வழியாகச் சென்று இராமலிங்கம் ஐயாவின் பெரிய இரும்புக் கதவுகளைத் திறந்து பார்த்தான் அவன். நாய் குரைத்தது. கதவைச் சாத்திக் கொண்டான். "யாரு பாரு' என்ற குரலோடு இராமலிங்கமே வெளியில் வந்தார். விளக்கு ஒளிர்ந்தது. - குரைத்த நாயை அதட்டி ஒட்டி விட்டு, 'என்ன மானம் காத்தான், இந்த நேரத்திலே?" என்று வியப்புடன் வரவேற்பு அளித்தார். தயங்கி நின்றான் மானம் காத்தான். 'ஏன் நிற்கிறே? அதோ பலகையிலே உட்காரு. ஒண்ணும் யோசிக்காதே. உட்காரலாம் உட்காரு. நீ உன் மக்களை மட்டு இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 81