பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானத்தோட என்கிட்டே வந்திருக்கே" என்ற இராமலிங்கம் சிறிது நேரம் தலைகுனிந்து வீற்றிருந்தார். மானம் காத்தான் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். இராமலிங்கம் ஒரு முடிவுக்கு வந்தவராகக் கூறினார். 'மானம் காத்தான் நான் ஒண்னு சொல்றேன் கேளு. நாளைக்கு இங்கே உள்ள மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டுறேன். மழை பெய்து வளம் கொழிக்க மாரியம்மன் கோயில் விழா நடத்தணும்னு ஒரு தீர்மானம். ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு மூட்டை அரிசி போட்டுக் கஞ்சி காய்ச்சி ஊத்தணும்னு சொல்லிடுறேன். சோறு போடுறதாச் சொன்னால் இங்கே உள்ளவங்களே சாப்பிட்டுப் போயிடுவாங்க. கோயில்வே கஞ்சி காய்ச்சி ஊத்தறதே ஏழை எளிய வங்க சாப்பிடனும் என்கிறதுக்காகத்தான். ஏழைகளுக்குக் கஞ்சி ஊத்தறதா சொல்லிட்டா இவங்க வர மாட்டாங்க. நீயே முன்னாலே நின்னு கோயில் கஞ்சி புண்ணியம்னு சொல்லி உன் கையாலேயே உன் மக்களுக்கு ஊற்று. பத்து நாள் விழா வைச்சு நான் ஏற்பாடு பண்ணிடுறேன். என்ன சொல்றே? அதற்குப் பிறகு வறட்சி நிவாரணம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம்.' மானம் காத்தான் எழுந்து நின்றான். அவரைக் கும்பிட்டான். 'ஐயா... உங்களை நான் எப்படி..." அவன் குரல் நெகிழ்ந்து தடுமாறியது. 'ஒண்ணும் அதிகமா சொல்லிடாதே. நீ மானம் காத்தா னாகவே இரு' என்றார் இராமலிங்கம். எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். (62) பழியில்லாத நல்ல மக்களைப் பெற்றால் வழிவழித் தலைமுறைக்கும் - பழியில்லை. • ருராம் சிட் தமிழ்நாடு (பி) லிமிடெட் இலக்கியப்பீடம் - அக்டோபர் 2oos - вз