பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடிக்கைக்காரரை நயமாக நடத்துவது இவற்றின் அவசியம் புரியாமல் தொழிலை நசிக்க விடுகின்றனர். இவற்றைக் கருதுபவர் தொழிலில் உச்சகட்டத்திற்குப் போவார்கள். தொழிலின் உச்சியிலுள்ளவர்கள் இவற்றால் உயர்ந்தவர் என்பதைக் கண்டும், மனமும், செயலும் ஏற்பதில்லை. இவற்றையெல்லாம் சுருக்கி அன்னை, 'மனிதன் கண் eplqiu Isrā (unconscious), £5mgár&#5sraërpou I Të (disorganised) செயல்படுகிறான்' என்கிறார். கண் திறந்தால் வாழ்வு உயரும். முறையாகச் செயல்பட்டால் மனிதன் உயர்வான். கண் திறந்து, முறையாக நடந்தால் கர்மமில்லை, தல்ைவிதியில்லை. 'அது எப்படி, மனிதன் என்றால் பொய் சொல்லாம லிருக்க முடியுமா? வீடு என்றால் சண்டை, சச்சரவு வரத்தான் செய்யும். தப்பு செய்யாமலிருந்தால் உலகம் கட்டுப்படாது' என்றெல்லாம் பேசும் மனிதன், தன் குறைகளை வலியுறுத்துகிறான். குறையை வலியுறுத்தும் மனிதனைக் கர்மம் கட்டுப்படுத்தும். அவன் வாழ்வை உதறிவிட்டு, மோட்சத்தை நாடுகிறான். இதற்குப் பதிலாக, நான் பொய் சொல்ல மாட்டேன். என்னால் பொய்யைத் தவிர்க்க முடியும், வீட்டில் சண்டை போடக்கூடாது, வீடு சுமுகமாக இருக்க முடியும், என்னால் தவறு செய்யாமலிருக்க முடியும்' என்று நம்பும் மனிதன், தன் நிறைவை வலியுறுத்துபவன். நிறைவை அறியும் மனிதனைக் கர்மம் கட்டுப்படுத்தாது. இறைவன் அவனை நாடி வருகிறான். அவனுக்குப் பூலோகத்தில் சொர்க்கம் உண்டு. ஏன் மனிதன் இப்படியிருக்கவில்லை, அப்படியிருக் கிறான். எனில், மனிதன் சோம்பேறித்தனத்தைப் பாராட்டி, தனக்குப் பிடித்ததை வலியுறுத்தி, தான் என்ற அகங்காரம் 86 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005