பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூண்டதால் கர்மத்தாலும், தலைவிதியாலும், வறுமையாலும், சிறுமையாலும், சோகத்தாலும், துன்பத்தாலும், மரணத் தாலும், ந்ோயாலும் பீடிக்கப்பட்டுள்ளான். ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து முடிவெடுத்து, தங்கள் நிறைவுகளை அறிய வேண்டும். அவற்றை வலியுறுத்த வேண்டும் என்று செயல்பட வேண்டுமானால், அவர்கள் தனித்தனியே தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்ள வேண்டியது. 0 நான் சண்டைக்குக் காரணமாக இருக்க மாட்டேன். 0 சத்தமாகப் பேசவே மாட்டேன். 0 எவரையும் அதிகாரம் செய்ய மாட்டேன், செய்ய நினைக்க மாட்டேன். 0 பிறர் குறை என் கண்ணில் படாது, பட்டால் கரு மாட்டேன். . . - e எப்பாடு பட்டாவது சுமுகத்திற்கு ஜீவன் அளிப்பேன். 0 நான் ஏற்றுக் கொண்ட கடமைகளை 100% நிறைவேற்றுவேன். 0 அன்றாடம் செய்ய வேண்டியதை அன்றே தவறாமல் செய்து முடிப்பேன். 0 பணத்தைக் கொடுத்தால் ஒழுங்காக, அழகாக, அடுக்கி வைப்பேன். - • பொய் சொல்லவே மாட்டேன், நினைக்கவும் மாட்டேன். - 0 என்னால் எந்நேரமும் இனிமையாக இருக்க முடியும். 0 பிறரைச் சந்தோஷப்படுத்துவதே என் தலையான {}5 l __6ü) t [). - 0 தேனியைப் போல சுறுசுறுப்பாக இருக்க என்னால் முடியும். செய்வேன். 0 வயதிற்குத் தகுந்த பக்குவத்தோடு நடப்பேன். 0 சிணுங்க மாட்டேன். இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 87