பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கோபப்பட மாட்டேன், பிறர் என் கோபத்தைக் கிளறினார் என்று கூறமாட்டேன். 0 என் கோபத்தை என்னால் அடக்க முடியும். நான் மட்டுமே என் கோபத்திற்குக் காரணம். என்றெல்லாம் கூறி, முடிவு செய்து செயல்பட்டால், அபரிமித மான வெற்றி அளவு கடந்து நம்மைத் தேடி வரும். அத்துடன் அன்னையும் வருவார். அதற்கு அழைப்பு எனப் பெயர். அன்னையை அழைக்க அதைவிட உயர்ந்த முறையில்லை. செயலால், மனத்தால் அன்னையை நாம் இப்படி அழைக்கிறோம். மனிதன் கவர்ச்சியை நாடுகிறான்; வாய்ப்பை நாடுவ தில்லை. கவர்ச்சியை நாடும் மனிதன் உணர்ச்சியை அறிகிறான். அதனால் உணர்ச்சிக்குக் கட்டுப்படுகிறான். உணர்ச்சிக்குக் கட்டுப்பட்ட மனிதன், கர்மத்திற்கும், தலைவிதிக்கும் கட்டுப்பட வேண்டும். அவனுக்குள்ளே ஒரே வழி வாழ்வை உதறிவிட்டு, மோட்சத்தை நாடுவதேயாகும். கவர்ச்சிக்கும் உணர்ச்சிக்கும் கட்டுப்படாதவனை கர்மம் கட்டுப்படுத்தாது, வாழ்வு அவனுக்குக் கட்டுப்படும். வாழ்வு கட்டுப்பட்டால், ஆன்மா வாழ்வில் வெளிவரும், சொர்க்கம் இங்கே வரும். > சிலர் இடைவிடாது பிறருக்கு உபதேசம் செய்கிறார்கள். எவருக்கும் இவருடைய உபதேசம் தேவைப்படவில்லை என்று அவர் அறிய வேண்டும். இவர் உபதேசம் ஒரேயொரு வருக்குத் தேவைப்படுகிறது. - அவர் இவர்தாம். பிறருக்குச் சொல்வதே தமக்கு வேண்டியதை என இவர் அறிய வேண்டும். - எனக்குத் திறமையில்லை என்பவர் தாம் இதுவரை வெற்றிகரமாகச் செய்த முடித்ததை நினைத்துப் பார்த்தால் அவருக்குத் திறமைமையுண்டு என அறியலாம். தமக்குள்ள திறமையை அறிந்து, புதுக் காரியங்களில் அவற்றைப் பயன்படுத்தும் பாங்கு வேண்டும். - 88 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005