பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக மாவீரர்களுள் ஒருவரான நெப்போலியனைப் பற்றி அனைவரும் அறியும்வண்ணம் மிக எளிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர் சு. செளந்தரராசன் அவர்கள். நல்ல வரலாற்று நூலை ஆக்கித்தந்துள்ள நூலாசிரியரைப் பாராட்டுகிறோம். - - செந்தமிழில் ஒரு நந்தவனம் (கட்டுரைகள் தொகுப்பு) ஆசிரியர்: இலக்கியமாமணி பி.வி. கிரி. வெளியீடு: சாந்தா பதிப்பகம், 13/5, ரீபுரம் 2ஆவது தெரு, இராயப்பேட்டை, சென்னை 600 014. பக்கங்கள் 288, விலை ரூ. 70, கவிஞர் பி.வி. கிரி அவர்கள் சிறந்த எழுத் தாளர். சிந்தனையாளர். கட்டுரையாளர். இந்த நூலில் 28 கட்டுரைகள் உள்ளன. இதழ்கள் பல வற்றில் நூலாசிரியர் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். நந்தவனத்தில் பல மலர்கள் பூத்து மணம் வீசும். அதைப்போல், இந்தத் தொகுப்பில் திருக்குறளில் திரண்ட கருத்துகளைக் குறள் மலர் என்றும், இலக்கியங்களில் வரும் இயற்கைக் காட்சிகளை இயற்கை மலர் என்றும் மற்றும் மனித நேயம், மழலை இலக்கியம் மற்றும் பல சுவையான செய்திகளை வெவ்வேறு தலைப்புகளில் எளிய நடையில் நூலாசிரியர் எழுதியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையிலும் நூலாசிரியரின் சிந்தனைச் சிதறல்கள் மிளிர்கின்றன. - பல இலக்கிய நூல்களை நூலாசிரியர் படித்துத் தேனமுதம் பருகி நமக்கு சுவையான கட்டுரைகளாக வழங்கியுள்ளார். இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுத்துள்ளார். நூலாசிரியரின் கடுமையான உழைப்பு தெரிகிறது. இந்த நூலைப் படித்து முடித்ததும் தமிழ் இலக்கியங்களின் செழுமையை அறிந்த உணர்வு ஏற்படுகிறது. 'பாவம் செய்யாதே பெரியோர் சொன்னது வேதமானது. கோபம் வருவதில்லை. - இளஞ்சுடர் 92 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005