பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


என்னை எனக்காகவே பயன்படுத்திக்கொண்டேனா? மணத்தை மற்றவர்க்குப் பரப்பி வழங்கினேன். எனது தேனை நானே பருகிச் சுவைத்தேனா? t வண்ணக்காட்சியால்கண்டோர்கண்களைக்குளிர்வித்தேன்; உள்ளத்தை உவப்பித்தேன். சூடிக் கொடுத்தேனா? சூடக் கொடுத்தேன். நானே படைத்துக்கொண்டேனா? கடவுளர்க்குப் படைக்கக் கொடுத்தேன். உண வாய், மருந்தாய் ஒப்புரவாற்றினேன். இவற்றால் உள்ளம் செம்மாப்படைந்தேன்; செம்மல் ஆனேன். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெரு வாழ்வால் தலைமைத் தகுதி பெற்றுச் செம்மல் ஆனேன். பழம் பூ, ஆனாலும், நான் ஒரு செம்மல். செம்மலான நிலையில் நீ உன்னைப் பழம் பூ' என்கின்றாய்; அதற்குப் பிங்கல நிகண்டிலிருந்து சான்றும் காட்டுகின்றாய், ஆனால், நத்தத்தனார், 'புதுப் பூஞ் செம்மல்" என்றுள்ளாரே -என்றொரு புலவரது மறுப்புக் குரலைக் கேட்கின்றேன். நத்தத்தனார் "புதுப் பூ” எனக் குறிப்பிடுவது நான் வீ' யாகக் கழன்று வீழ்ந்து செம்மலான நிலையில் அன்று. எத்தகைய புதுப் பூஞ் செம்மல் என்றுள்ளார் ? "நறும்பொழில் குயில் குடைந்து உதிர்த்த புதுப் பூஞ் செம்மல்" ே அலராக இருந்த என்னைக் குயில் ஒன்று குடைந்து உதிர்த்துவிட்டது. இயல்பாக உதிரவில்லை; உதிர்க்கப்பட்டேன். உதிர்க்கும் போது என் பருவம் அலர். அந்நிலையில் நான் புதுப் பூ உதிர்ந்து கீழே விழுந்த பின்னர்தானே செம்மல், அதனால், முன் நிலையில் புதுப் பூ எனப்பட்டேன். எனவே, செம்மல் என்றால் பழம் பூ தான். பழம் பூ நிலை இறப்புப் படுக்கை நிலை என்றாலும் எனது மணமூச்சு இன்றும் அடங்கிவிடவில்லை. பெருங்காயம் 88 சிறுபாண் :