76
'பூவினுள் நாற்றமும் போன்று ளன் எம்மிறை'64
அல்லி மலர் விரை ஒத்தான் '65
-என்றெல்லாம்.இறையடியார்கள் என்ளுேடு ஒன்றிய உயிர்த் தன்மையை மணம் என்று பாடியுள்ளனர். மணம் ஒன்றியதால் நான் இறைவனுக்கே ஈடாக்கப்பட்டேன்.
ஒரு கட்டழகி, மனத்துடன் விரிந்த செங்கழு நீர்ப் பூவைக் கூந்தலோடு சேர்த்துத் திருகிச் செருகினாள். செருகிய தோற்றம் ஒரு கவர்ச்சிப் பொலிவாகக் காண்போரை உலுக்கியது. ஒரு காளையர் கூட்டம் பார்த்துச் சொக்கி நின்றது. ஒருவன் ஐயோ! மணமலரோடு என் உயிரையும் அன்றோ கூந்தலில் செருகுகின் றாள்' என்று ஒலமிட்டான். இதைக் கண்டுகொண்டிருந்த சயங் கொண்டார் என்னும் புலவர்.
“முருகின் சிவந்த கழ நீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல் மடவீர்,
செம்பொற் கபாடம் திறமினோ 6
-எனப் பாடினார்.
பாரதி,தானே காதலனாகிக் கொள்கின்றான். கண் ணனைக் காதலியாக முன்னே நிறுத்துகின்றான். தனக்கும் அவளுக்கும் உள்ள இணைப்பை,
ಆ.469 € 7ಾ ಹತ್ರ
விரியுமலர் நானுக்கு' 7
- எனப் பாடுகின்றான். அவனே காதலியாக மாறுகின்றான் :
'மணம் விரும்பவில்லை - சகியே
மலர் பிடிக்கவில்லை” 68
. - - X- - என்னும் காதல் பேச்சில் நானும் மணமும் ஒன்றித்துப் பேசப்படுவது போன்றே காதலால் முகிழ்ந்த குழந்தையை, . . -
64 திருமந் : 2639, 67 கண்ணம்மா என் காதலி : 5, 65. திருவாய் : அந்தாமம் 68 கண்ணன் என் காதலன் 8.
8ே கலிங், ப கடைதிறப்பு : 30,