பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78


எனது ஒவ்வொரு மணமும் பின்வருமாறு உரியதாகின்றது. இப்படிச் சொல்வதைவிட ஒவ்வோர் இசையும் எனது ஒவ்வொரு மணத்தைப் பெற்றுக் கமழ்கின்றது என்று சொல்ல வேண்டும். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை இசை உறுப்புகள். இவற்றில் குரல் என்னும் இசை மெளவலால் மணக்கும்; துத்தம் முல்லை மணத்தைப்பெறும்; கைக்கிளை கடம்பு மணம் வீசும்; உழையில் வஞ்சியை மோக்கலாம்; இளிக்கு நெய்தல் மணம் ஏறும்; விளரிக்கு வீரையின் மணம் ஒன்றும்; தாரத்தில் புன்னைமனம் இழையும், 74 இவ்வாறெல்லாம் தமிழ் நூல்கள் யாவும் எனது மணத்தை உயிராகக் காட்டுகின்றன. மணத்தைக் குறிக்கும் சொற்கள் யாவற்றையும் எனக்கு அடைமொழியாக்கி, 'கமழ் புதுப் பூ', 'கடி மலர்', ' நறுமலர்', "விரைமலர், 'மன மெளவல்’’ -என்றெல்லாம் பாடுகின்றன. g) p இவை பாடுவதால் மணம் எனது உயிராகிவிடவில்லை. மணம் எனது உயிர் என்பது சான்றோர்களால் குறித்துக் காட்டப்பட்டுப் போற்றப்படும் ஒன்று என்பதற்கே இவற்றை எல்லாம் எடுத்துப் பேசினேன். எம்மில் எந்த ஒன்றும் மணமில்லாதது என்றில்லை. கொடி முந்திரி, பழத்தால் இனிக்கும். அதனில் பூக்கும் நான், 'திராட்சைக் கொடிகளும் பூத்து மனம் விசிடுகின்றனவே'ாக-என விவிலிய நூல் குறிப்பிடும் பாங்கு பெற்றுள்ளேன். மணம் எனது உயிரென்றால் எனது உடல் முழுதும் நிறைந்திருக்க வேண்டுமன்றோ? இது கண்காணும் உண்மை என்பதோடு மூக்கு காணும் உண்மையுமாகும். எனது இதழ் மணக்கும்; அல்லித் தண்டு மணக்கும்; தாது மணக்கும்; சூலகம் மணக்கும்; மகரம் மணக்கும்; என்னிலிருந்து வழியும் தேனும் மணக்கும். என்னோடு சேர்ந்த நாரும் மணக்கும்; நீரும் மணக்கும். 8 - 74 'மெளவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல், வீரை, புன்னையும் இசைமணம்'- சேந்: தி: ஒலி 75 விவி : சாலமோன் இசைப்பாடல்கள் : 2 : 18. 78 "ஒண்ணிறப் பாதிரிப்பூ சேர்தலால் புத்தோடு கண்ணிர்க்குத் தான்புயந் தாங்கு. -நாலடி :-489 . .