பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
79


'ஆ ! எவ்வளவு இனியவை' -என்று கேட்டோர் வியக்கும் வண்ணம் எனக்கமைந்த இனிய தன்மைகளைக் கேளிர் : எனது உயிரான மணத்துடன் மென்மை, வண்ணம், தூய்மை, தன்மை, சுவை, ஒளி, எழில், கவர்ச்சி, மங்கலம் --ஆகிய இவை பத்தும் எனது தன்மை முத்திரைகள். 曾 மணத்தை அடுத்த எனது இயல்புத் தன்மை 2. மென்மை மென்மை. மணம் உயிர் என்றால்மென்மை நாடி எனது நாடி எனலாம், மாந்தருள் ஆடவர் வன்மையின் உருவம். மகளிர் மென்மை யின் வடிவம். மகளிரது மென்மையை இலக்கியங்கள் எவ்வாறு பேசுகின்றன? மென்கூந்தல், மெல்லிதழ், மென்றோள், மென்கை, மெல்லிடை, மெல்லடி என ஒவ்வொரு உறுப்பையும் மென்மை அடைமொழியுடன் வண்ணிக்கின்றன. எல்லாவற்றையும் கூட்டி அம் மெல் ஆகம்' என்றும் 'சிறு மெல் ஆகம்’18 என்றும் கூறப்படுவதால் மகளிரது மென்மை அவர்தம் உடல் மென்மை என்பதை அறியலாம். அவ்வுடலின் மென்மையைத் தெளிவுபடுத்த என்னை அடைமொழியாக்கினர். "மென் பூ மேனி'79 என மணிமேகலை சுட்டிக்காட்டுகின்றது. ஆம், மகளிரது உடலின் மென்மையை அளவிடும் அளவுகோலாக எனது மென்மைதான் கொள்ளப் பட்டது. - - - 77 குறு : 159, 8 19 மணி : 29 : 84 78 குறு : 280 : 8 • *