பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


'மாமலர் மேய சோதி" - (திருவா : திருவார்த்தை : 1) 'பூ மிசை நடந்தான்' - (சூடா. நி : 17) -என இறைவன் என்னால் பெயர் பெற்றான். இறைவனே தனது மென்மையைக் காட். எனது மென்மை குலையாமல் நடந்து காட்டவேண்டி யுள்ளமை குறிக்கத்தக்கது. - எனது மணம் போன்று நின்ற இறைவன், மென்மை போன்று நடந்து, அடுத்து, எனது தன்மையாம் வண்ணத்திற்கு வருகின்றான். " அரும் பி ன் வண் ண மும் ஆ, வ ர் 3. வண்ணம்- ஐயாறன்ரே" என அப்பர் சிவனை என் சின்னம் நிறமாகவே பாடினார். சேக்கிழார் பூ வண்ணத்தர்'88 என்றார். எனது வண்ண மானவர்கள் வண்ண மா மலர்கொடு வானவர் வழிபட'89 அருள்செய்தனர். 'பறவாப் பூவைப் பூவினோயே'90 எனத் திருமாலைக் கடுவன் இளவெயினனார் பாட அதற்குப் பூ என்னும் பெயர் நிறத்தின்மேல் ஆகுபெயராய் நின்றது' எனப் பரிமேலழகர் விளக்கந் தந்து எனது நிறத்தன்மையை நாட்டினார். “பூ அன்ன கண்ணாள்', 'மலரன்ன கண்ணாள்” 'இவள்கண் பலர் காணும் பூ ஒக்கும்'9 என்றெல்லாம் திருக்குறள் மகளிர் கண்ணுக்கு என்னைக் கூறி வண்ணிப்பானேன்? இஃதோ ஒரு நெஞ்சத் தோய்ந்த உரையாடல் விடை தருகின்றது: காதலன் : நெஞ்சமே! மலர்களைக் கண்டு ஏன்மயங்கினாய் ? நெஞ்சம் : மலர்கள் நம் காதலியின் கண்களை ஒத்திருக் கின்றன. அதனால் மயக்கம் வந்தது. கா : உன் மயக்கம் தவறான பார்வையால்.நேர்ந்தது. நெ 1 எப்படி? - கா : எப்படியா...? அது வந்து......-தடுமாறிய காதலனுக் காக மணக்குடவர் குரல் கொடுக்கின்றார்: . - 87 அப், கே , திருவையாற்றுப் பதிகம். 90 பரி 8 : 78. 88 பெரி, பு : தடுத்தாட்கொண்டபுராணம் 91 குறள் 1803; 1142, 1112, 89 ஞா. தே . * - - - - . . . . . . . .