பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


'கண் பூவினது நிறம் ஒக்குமாயினும் குணம் ஒவ்வாது'92 -இதனைக் கேட்டு மயங்கிய நெஞ்சமும் தயங்கிவிட்டது. மகளிரது கண்ணழகை எனது வண்ணங் கொண்டே ஒப்பிட்டுப் பேசுவர்; சிறப்பிப்பர். கண்ணழகு எனது வண்ண அழகு. கலக்கத்தால் கண்கள் கவின் இழக்கும். அழகிழந்த கண்ணும் 'மாம லர் இழந்த கண்ணும்' என என்னைக் கொண்டே அறிவிக்கப்படும். நான் உலக வண்ணங்களின் சின்னமாவேன். பூ என்ற எனது சொல்லுக்கே 4 நிறம் என்றொரு பொருள் கொண்டனர். என் நிற வேறுபாடுகள்தாம் இயற்கைக்கு எழிற்கோலமிடுகின்றன, எனது நிற வேறுபாடுகளுக்கும் பூவோ பூ பாடலில் அடையாளம் உள்ளது. அதிற்பேசப்படும் பூக்கள் வண்ண வேறுபாட்டுப் பூக்களாக உள்ளன: கண்ணிக்குத் தாழம் பூ - சிவப்பு. (செந்தாழை) கொண்டைக்குத் தாழை - வெண்மை (வெண்டாழை) ஆவாரம் பூ - மஞ்சள் அத்திப் பூ - நீலம் புளியம் பூ - இரு நிறம். உள்ள பூக்களை ஒரு முறைப்படுத்தியுள்ளேன். ஆம் சிவப்பு எனது முதன்மை வண்ணம். வெண்மையும் மஞ்சளும் நீலமும் சிவப்புபோல் எனது மூலவண்ணங்கள். மற்று உலகில் உள்ள இளஞ்சிவப்பு, கருநீலம் முதலிய யாவும் மேல் வண்ணங் களின் கலவைப் பிறவிகள். இனக்கலப்பில் தோன்றும் நிற வேறு பாடுகள்பற்றி என்னைப் பேசவைக்கும் ஆசிரியர் முன்னரே' குறித்துள்ளதை நீங்கள் நினைவிற்கொள்ளலாம். மற்றொரு குறிப்பிடத்தக்க நிறமாகிய பச்சையை நான் ஒரு காரணத்திற்காக விடுத்துள்ளேன். எனக்கு முன்னமைந்தவளாம் 92 குறள் 1112 உரை 93 அகம் : 197 1 94 'பூசும் சாந்தும் கலையும் மணியும் பூவுறு நிறம் எனப் பாத்தனர் கொணலே. -இலக்கண விளக்கம்; 512 . 9 இலக்கியம் ஒரு பூக்காடு : பக்கம் 11,12,